ஆயுத பூஜை, தொடர் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. எத்தனை பேர் தெரியுமா?
சென்னை: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ததாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதை போல் அதன் தலைநகரும் தொழிலுக்காக படிப்புக்காக வந்தவர்களை வாழ வைக்கிறது. சென்னையில் வேலைத் தேடியும் படிப்புக்காகவும் பலர் தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு வருகிறார்கள்.

இவர்கள் சென்னையில் தங்கி தங்கள் அலுவல்களை பார்க்கிறார்கள். முக்கிய பண்டிகைகள், விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் என வந்தால் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இவர்கள் ரயில்கள், பேருந்துகள், கார்கள், டூவீலர்கள், மூலம் தங்கள் ஊரை சென்றடைகிறார்கள்.
அந்த வகையில் இந்த முறை ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வருகிறது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கெனவே விடுமுறை என்ற நிலையில் திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும்.
இந்த விடுமுறையையொட்டி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் சென்னையிலிருந்து கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் சொந்த ஊரின் தூரத்தை பொருத்து இரு சக்கர வாகனங்கள், கார்கள் மூலமும் நிறைய பேர் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இது இல்லாமல்ஸ கொடைக்கானல், ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்றுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications