நண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி
சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர்.
கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற இரண்டு மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மெரினாவில் கடலில் அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது. போலீசார் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். மேலும், குதிரைகளில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்புவதை வீர விளையாட்டாக கருதி, பல இளைஞர்கள், மாணவர்கள் அழமான பகுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
அதே நேரம் ராட்சத அலைகளில் சிக்குபவர்கள் அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்தநிலையில், விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் பரத், ஜெய்கீர்த்தி, தினேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர். அவர்களில், தினேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications