சென்ட்ரல் ஸ்டேஷனில் கடத்தப்பட்ட 3 வயசு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
சென்னை சென்ட்ரலில் 3 வயது குழந்தையை கடத்திய நபரை தேடி வருகிறார்கள்
Recommended Video
சென்னை: சென்ட்டிரல் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை நள்ளிரவில் கடத்தி சென்ற நபரை போலீசார் அதிடியாக கைது செய்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த தம்பதி ராம் சிங் - நீலாவதி. இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் நிலையத்தில் 3 வயது குழந்தை குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது மணி இரவு 11.40 ஆகிவிட்டது.
அதனால் அவர்கள் 6-ம் எண் பிளாட்பாரத்திலேயே படுத்து தூங்கி விட்டனர். திடீரென கண் விழித்து பார்த்தால் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இதனால் போலீசாரும் உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது 12.45 மணி அளவில் ஒரு இளைஞர் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் அருகில் வந்து நிற்கிறார். அவரது கையில் ரெட் கலரில் ஒரு பை வைத்துள்ளார். பிறகு மெதுவாக குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார்.

மர்மநபர்
இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த நபர் குழந்தையை சென்ட்ரலில் இருந்து தாம்பரம் சென்று அங்கு இறங்கி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ரயில்வே போலீசின் ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தை
அதேபோல, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்போரூரில் காப்பகம் ஒன்றில் அந்த குழந்தை உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

ஒப்படைப்பு
திருப்போரூர் சாலையில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருந்ததாகவும், இதை பார்த்த யாரோ ஒரு நபர் அக்குழந்தையை மீட்டு, சைல்டு லைன் மூலம் பரங்கிமலை குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஒப்படைத்திருக்கிறார் என்ற தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட காப்பகத்தில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications