ராணியின் சாபம்.. திடீரென இறந்த சதீஷ்.. ஆத்திரமடைந்த நண்பர்கள்.. வீடு துவம்சம்.. 3 பேர் கைது
பெண்ணின் வீட்டை அடித்து தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை அருகே இளைஞரின் திடீர் மரணத்திற்கு எதிர்வீட்டு பெண் கொடுத்த சாபமே காரணம் என்று கூறி இறந்த இளைஞரின் நண்பர்கள் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது வீட்டு வாசலில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடை வைப்பதற்கு ஆரம்பம் முதலே இளையகணேசன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ராணியால் தொடர்ந்து டிபன் கடையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு இளையகணேசன் குடும்பத்தினரே காரணம் என்று கருதிய அவர், இளையகணேசன் குடும்பத்தினர் அழிந்து போகட்டும் என்று சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளையகணேசனின் மகன் சதீஷ் என்பவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ராணியின் சாபத்தால்தான் சதீஷ் உயிரிழந்ததாகக் கருதிய சதீஷின் நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ராணியின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்த டேவிட் என்ற ராஜா, ஜவகர் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications