'ஆட்டோவில் ரூ.300, கால் டாக்ஸில் 150 ரூபாய்'.. கோயம்பேட்டில் உபேர் நிறுவனத்தில் ஓட்டுநர்கள் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு 1.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.50 கட்டணம் என நிர்ணயித்துள்ளது. ஆனால், உபேர் நிறுவனம் அதைவிடக் குறைவாக ரூ.15 கட்டணத்தில் வாகனங்களை இயக்குகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி, கோயம்பேட்டில் உள்ள உபேர் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

"தமிழக அரசு கடந்த மாதம் 27-ம் தேதி ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியது. அந்தக் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், உபேர் நிறுவனம் 5,000 வாகனங்களை வைத்துள்ளது. வேகனார், எவரெஸ்ட், பிளிட் போன்ற நிறுவனங்களும் வாகனங்களை இயக்குகின்றன. இந்த வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிடக் குறைவான கட்டணத்தையே வழங்குகின்றன. வேகனார் வாகனங்களுக்கு உபேர் நிறுவனம் ரூ.10, ரூ.15 மட்டுமே வழங்குகிறது. இதைக் கண்டித்துத்தான் உபேர் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம்.

300 by Auto 150 by Cab Auto Drivers Besiege Uber Office in Chennai s Koyambedu

எவரெஸ்ட் நிறுவனம் 2,000 பிளிட் வாகனங்களை வைத்துள்ளது. இவ்வளவு வாகனங்களுக்கு எப்படி அனுமதி வழங்குகிறார்கள்?

அதேபோல், நியூரே என்ற ஆட்டோ நிறுவனத்திடம் 300 வாகனங்கள் உள்ளன. அந்த நிறுவனத்துக்கும் மொத்தமாக அனுமதி வழங்கியுள்ளனர். இந்த வாகனங்கள் தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிடக் குறைவான கட்டணத்தையே வசூலிக்கின்றன. இதனால் தனிநபர் ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகிறோம். எனவேதான், உபேர் நிறுவனத்துக்கு எதிராக இன்று போராட்டம் நடத்துகிறோம்.

ஒரு தனியார் நிறுவனமே 2,000 முதல் 3,000 வாகனங்கள் வரை வைத்துள்ளது. ஒரு வாகனம் ஒரு நாளைக்கு 10 டிரிப்புகள் செல்கிறது என்று வைத்துக்கொண்டால், குறைந்தது 30,000 டிரிப்புகளை எவரெஸ்ட், பிளிட் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

இதனால் தனிநபர் ஆட்டோக்களுக்கான வருமானமும் போய்விட்டது. தனிநபர் கார் ஓட்டுநர்களுக்கான வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் குடும்பங்களே நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. அரசு உயர்த்திய கட்டணத்தைக்கூட முறைப்படுத்தவில்லை.

கால் டாக்ஸிகளைப் பொறுத்தவரை, ஆட்டோ கட்டணத்தைவிடக் குறைவாக வசூலிக்கிறார்கள். ஆட்டோவில் ரூ.300 கொடுத்து செல்ல வேண்டிய இடத்துக்கு, கால் டாக்ஸியில் ரூ.150-க்கு ஏசி வசதியுடன் செல்லலாம் என்கிறார்கள். இவ்வாறு குறைந்த கட்டணத்தில் வாகனங்களை இயக்குவது எவரெஸ்ட், பிளிட் போன்ற நிறுவனங்கள்தான்.

இதேபோல், பிசிசியில் இயங்கும் 300 முதல் 400 வாகனங்கள் கொண்ட நிறுவனங்களும் குறைவான கட்டணத்தை நிர்ணயித்து வாகனங்களை இயக்குகின்றன. பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்கள். ஆனால், நாங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்" இவ்வாறு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+