ஊருக்கு கிளம்பிட்டீங்களா? அரசு பஸ்ஸில் வந்தது மாற்றம்.. தமிழக போக்குவரத்து துறை அதிரடி.. இனி நிம்மதி
சென்னை: தமிழக மக்களுக்கு சிறப்பு செய்தி ஒன்றினை தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.. இதனால் பெருத்த நிம்மதியும் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகமும், ரயில்வே துறையும், பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும், கூடுதல் ரயில்களையும் இயக்கி வருகிறது.
பொங்கல் பண்டிகை: அந்தவகையில், விரைவில் பொங்கல் பண்டிகை வருகிறது.. அதாவது, ஜனவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகை தொடங்குகிறது.. ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களின் மிக மிக முக்கியமான பண்டிகை என்பதால், பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு டிக்கெட் முன்பதிவுகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
இது ஒருபக்கம் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை 18-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளாகும். அதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லக்கூடியவர்கள் இன்றே தங்கள் பயணத்தை தொடங்கிவிட்டார்கள்.
அரசு பஸ்கள்: சென்னையை பொறுத்தவரை, ரயில்கள் எல்லாமே நிரம்பி விட்டதால், அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய அரசு பஸ்கள் மட்டும் இருப்பதால், ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவுகளையும் செய்ய துவங்கிவிட்டனர்..
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் நேற்று ரிசர்வ் செய்திருந்த நிலையில், இன்று மேலும் கூடுதலாக 5000 பேர் ரிசர்வேஷன் செய்துள்ளனர். இதில், சென்னையில் இருந்து மட்டுமே, 15 ஆயிரம் பேர் புக்கிங் செய்திருக்கிறார்களாம். முன்பதிவு செய்யாமல் இன்னும் ஆயிரக்கணக்கில் மக்கள் வரக்கூடும் என்பதால் 850 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன...
வெளியூர்கள்: ஏற்கனவே, 2100 அரசு பஸ்களுடன் வெளியூருக்கு இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 850 பஸ்கள் இயக்கப்பட உள்ளது, பொதுமக்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்துவருகிறது. நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் பெருகியுள்ளது.












Click it and Unblock the Notifications