"சில்வண்டு" சிக்கிடுச்சே.. 28 ஆண்களாமே.. மாஸ்டர்பிளான் கயல்விழி.. அடடடா அதுவும் அந்த போலீஸ்காரர் வேற
சென்னை: 4 திருமணம் செய்த அபிநயாவுக்கு 28 ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.. குறிப்பாக 2வது கணவரைவிட்டு, அபிநயா ஏன் விலகி செல்லவில்லை? என்ன காரணம் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன்.. 25 வயதாகிறது.. இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது, முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா என்பவருடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அபிநயாவுக்கு 28 வயாகிறது..

ஹாஸ்டல்
இவர்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது..2 பேரும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர்.. ஆனால், தான் ஒரு அனாதை என்றும் அபிநயா சொல்லவும், பரிதாபப்பட்ட நடராஜன், அபிநயாவை அளவுக்கு அதிகமாக விரும்பி திருமணம் செய்து கொண்டார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில், இவர்களின் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், அக்டோபர் 19ம் தேதி இரவு, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடீரென காணாமல் போய்விட்டதால் பதறி போனார்.. இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கெங்கோ தேடி பார்த்தும், மனைவியை காணவில்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு பீரோவை திறந்து பார்த்தால், அங்கே 17 சவரன் நகையை காணவில்லை..

மிஸ்ஸாயிடுச்சே
20,000 ரொக்க பணமும் மிஸ்ஸிங்.. இதனால், நடராஜன், தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் மனைவியை காணோம் என்று புகார் தந்தார்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரும் தங்கள் விசாரணையை ஒவ்வொன்றாக ஆரம்பித்தனர்.. செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த லாட்ஜில் தங்கியிருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்... அபிநயாவின் ஆதார் கார்டை கைப்பற்றி விசாரித்ததில், அந்த பெண்ணின் பெயர் அத்தனை நாளும் கயல்விழி என்றே பொய் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.. அபிநயா என்பதுதான் உண்மையான பெயராம்..

கல்யாணம்
மேலும், அபிநயாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி உள்ளது.. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால், இதற்கு முன்பு, ஏற்கனவே 3 பேரை கல்யாணம் செய்துள்ளார் அபிநயா.. அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும், அங்கு பழக்கமாகும் இளைஞர்களை குறி வைத்து கல்யாணம் செய்து, நகை-பணத்தை சுருட்டி கொள்வாராம்.. ஒவ்வொரு முறையும், இளைஞர்களை தன் வலையில் விழவைத்து, அவர்களை திருமணமும் செய்துள்ளார்.. இப்போது போலீஸாருடன் அபிநயாவுடன் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ரியமான மகள்
குறிப்பாக 4 கல்யாணம் தவிர, அபிநயா மற்ற இளைஞர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்ற விவரங்களும், எல்லா கணவன்களையும் பிரிந்துவந்துவிட்ட அபிநயா, எதற்காக 2வது கணவர் செந்தில்குமாரிடம் மட்டும் தொடர்பில் இருந்தார் என்ற தகவல்களும் கசிந்துள்ளன. மதுரை அரிசிக்கார தெருவை சேர்ந்த அபிநயா, 10-ம் வகுப்பு வரை படித்தவர். இவர் அப்பா, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்தாலும், மகளை செல்லமாகவே வளர்த்து வந்துள்ளார்.. அபிநயாவுக்கு 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

டைவர்ஸ்
ஆனால் தன்னைவிட விஜய்க்கு வயது அதிகம் என்று சொல்லி, அவருடன் தகராறு செய்த அபிநயா, ஒரு ஆண்டுக்குள் டைவர்ஸ் செய்துவிட்டார் அதற்கு பிறகுதான், சிவகங்கை பகுதியில் நகை கடையில் வேலை பார்த்தபோது, 2013-ம் ஆண்டு அதே கடையில் தன்னுடன் வேலை பார்த்த செந்தில்குமாரை 2வது திருமணம் செய்துள்ளார்.. ஆனால் செந்தில்குமாருடன் இவர் சரியாக வாழவில்லை.. ஒருநாள் திடீரென காணாமல் போய்விட்டார்.. இதனால் பதறிப்போன செந்தில்குமார், மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசுக்கு ஓடினார்.. அப்போதுதான், மதுரையில் தன்னுடன் கம்ப்யூட்டர் கிளாஸில் படித்த பிரபு என்பவருடன் ஒரு வாரம் கேரளாவுக்கு ஜாலி டூர் கேரளா சென்றது தெரியவந்தது..

மாயமாயிட்டாரு
10 நாட்களில் போலீசார் அபிநயாவை கண்டுபிடித்து செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.. இதனால் நொந்து போன செந்தில்குமார், அந்த பகுதியில் குடியிருப்பதை விட்டுவிட்டு, சிவகங்கையில் இருந்து மதுரைக்கு அபிநயாவை அழைத்து வந்தார்.. ஆனால், அபிநயாவுக்கு ஊர் மாறினாலும் குணம் மாறவில்லை.. அங்கு பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் அபிநயா நெருங்கி பழகியதுடன், மறுபடியும் அவருடன் மாயமானார். மறுபடியும் மனைவியை காணோம் என்று செந்தில்குமார் போலீசுக்கு ஓடினார்.. மதுரை திடீர்நகர் போலீசாரும் விசாரணை நடத்தி, 2-வது முறையாக அபிநயாவை கண்டுபிடித்து செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.

ஜஸ்ட் 10 நாள்
ஆனால், 2020-ம் ஆண்டு மறுபடியும் அபிநயா இன்னொரு நபருடன் மாயமானார்.. அவர் யார் என்று இன்னும் தெரியவில்லை.. அதேபோல, செந்தில்குமாரும் இந்த முறை போலீசுக்கு போகவில்லை.. கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அபிநயா தங்கியிருக்கும் தகவல் செந்தில்குமாருக்கு தெரிந்தும்கூட, மனைவியை கண்டிக்கவில்லை.. இந்த இடைவெளிநாட்களில், ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து, ஜஸ்ட் 10 நாட்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்துள்ளார்.

கோதுமை மாவு
மறுபடியும் அவரையும் ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமானார்.. 3வதாக வாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம், மனைவியை காணாமல், போலீசுக்கும் போகாமல், ஆட்டோவை எடுத்துக் கொண்டு மனைவியை தேடி தேடி அலைந்தார்.. அப்போதுதான் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் அபிநயா வேலை செய்வதை கண்டுபிடித்தார். ஆனால், ஏதோதோ சாக்கு சொல்லி, அவருடன் செல்ல அபிநயா மறுத்துவிட்டார். அப்போதுதான் அந்த பேக்கரிக்கு கோதுமை மாவு வினியோகம் செய்ய வந்த நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. முறைப்படி கல்யாணம் செய்தது மொத்தம் 4 பேரை என்றாலும், எத்தனையோ இளைஞர்களை அபிநயா ஏமாற்றி உள்ளார் என்கிறார்கள்.. பலருடன் உல்லாசமாகவும் வாழ்ந்து வந்துள்ளார்...

32 சிம் + 28 ஆண்கள்
அபிநயாவிடம் 32 சிம் கார்டுகள் சிக்கி உள்ளன.. ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் நம்பர் மாற்றி பேசி வந்துள்ளார்.. அபிநயா தொடர்பு வைத்திருந்தது, மொத்தம் 28 ஆண்களாம்.. இதில் ஒரு போலீஸ்காரரும் அடக்கம் என்பதுதான் இதில் ஹைலைட்டே.. அந்த போலீஸ்காரருக்கு ரூட் விட்ட அபிநயா, அவரையே கல்யாணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தாராம்.. அந்த சத்தியத்தை போலீஸ்காரரும் நம்பி உள்ளார்.. கடைசியில் அவரையும் ஏமாற்றிவிட்டுதான், ஆட்டோடிரைவருடன் பழகி வந்துள்ளார்.

மனசில்லை
2வது கணவரான செந்தில்குமாரை ஆரம்பத்தில் இருந்தே அபிநயாவுக்கு பிடிக்கவில்லை.. செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.. ஒவ்வொரு கணவரிடமும் ஏதாவது சாக்கு சொல்லி கழட்டிவிடுவதைபோல, குடிபோதை விவகாரத்தை செந்தில்குமாரிடம் சுட்டிக்காட்டினாராம்.. ஆனாலும் அபிநயாவை பிரிய செந்தில்குமாருக்கு மனமில்லை.. இத்தனைக்கும் மாசத்தில் 10 நாள் திடீர் திடீரென மாயமாகிவிடுவாராம்.. அவராகவே 10 நாள் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவாராம்..

10 10 நாட்கள்
எனினும் மனைவி அபிநயாவுக்காக, செந்தில்குமார் குடிப்பதை ஒருகட்டத்தில் நிறுத்தி உள்ளார்.. உனக்காகவே குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும் சொல்லி உள்ளார். இந்த ட்விஸ்ட்டை அபிநயா எதிர்பார்க்கவேயில்லை.. மறுநாளே வீட்டை விட்டு வெளியே போனவர் 10 நாள் கழித்துதான் வந்தாராம்.. இதனால் மறுபடியும் குடிபோதையில் விழுந்துள்ளார் செந்தில்குமார்.. யாராக இருந்தாலும் வெறும் 10 நாள்தான் அவர்களிடம் குடும்பம் நடத்துவாராம் அபிநயா.. இதில் அதிகபட்சம் 8 மாதம் குடும்பம் நடத்தியது நடராஜனுடன்தானாம்..

மாயவண்டு
அபிநயாவின் நடத்தை செந்தில்குமாருக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொருமுறை வீட்டுக்கு திரும்பி வரும்போதும், செந்தில்குமாரின் குடிசெலவுக்கு பணத்தை தந்துள்ளார்.. இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே செந்தில்குமார் உடந்தையாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.. சமீபத்தில், ஃபேஸ்புக்கில் அறிமுகமான இளைஞருக்கு துபாய் செல்வதற்கு, 2 பவுன் நகை மற்றும் பணத்தை அபிநயா தந்து உதவியுள்ளது ஏன் என்ற விசாரணை நடக்கிறது.. அபிநயாவிடம் ஆட்டோகாரர் முதல் போலீஸ்காரர் வரை சிக்கி சீரழிந்தவர்களின் லிஸ்ட்படி விசாரணையும் நடக்கிறது.. அபிநயாவிடம் ஒரு போலீஸே ஏமாந்துள்ளார் என்றால் அவர் யாராக இருக்கும்???!!

ஷேர்சேட்
இன்னொரு விஷயமும் இதில் வெளிவந்துள்ளது.. தான் திருடிய நகைகளை செந்தில்குமாரிடம் தந்து, அவைகளை விற்றுவர சொல்வாராம் அபிநயா.. இதற்காக, அபிநயா, ஷேர் சாட்டை பயன்படுத்தியே பலரை மோசடி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.. குறிப்பாக, பத்துக்கும் மேற்பட்ட ஐபிக்களில் இருந்து இவரது ஷேர் சாட் கணக்கு இயங்கி வந்திருக்கிறது... அந்த ஷேர் சேட் கணக்குகளை கைப்பற்றி, பேங்க் அக்கவுண்ட்டையும் வைத்து, சைபர் கிரைம் போலீசார் அதிரடியில் இறங்கி உள்ளனர்.. கடைசியாக நடராஜனுடன் தொடர்பு ஏற்பட்டபோது, கோயிலில் திருமணம் நடந்தாலும், அதை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று அபிநயா ஆசைப்பட்டாராம்.. அவருக்காகவே, நடராஜன் நிறைய செலவு செய்திருக்கிறார்.. ரிசப்ஷனும் வைக்க வேண்டும் என்று கேட்டாராம்.. எனவே, திருமண வரவேற்பு அந்த பகுதியில் மிகவும் பிரமாண்டமாக நடந்ததாக கூறப்படுகிறது...
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications