தமிழகத்தில் 33,000-ஐ கடந்த கொரோனா.. இன்று 303 பேர் உயிரிழப்பு.. கோவையில் பாதிப்பு அதிகரிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

33,000-ஐ கடந்த கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் 14 நாள்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உயிரிழப்பு அதிகரிப்பு
.இதனால் மொத்த பாதிப்பு 15,65,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 303 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 17,359 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 20,905 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 13,39,887 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
2,07,789 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,57,977 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,44,66,109 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6640 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 82 பேர் இறந்துள்ளனர். கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

கோவையில் கொரோனா ஆதிக்கம்
செங்கல்பட்டில் 2013 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாதிப்பு உள்ளது. கோவையில் மட்டும் 3124 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1521 பேருக்கும், மதுரையில் 1231 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1237 பேருக்கும், திருவள்ளூரில் 1551 பேருக்கும், திருச்சியில் 1263 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications