கவலையே வேண்டாம்.. 3,412 சிறப்பு பேருந்துகள் இருக்கு! பொங்கல் லீவுக்கு போனவங்க இன்று திரும்பலாம்!
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு முழுவதும் இன்று 3,412 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 4,302 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற பெரும்பாலானோர் நேற்று முன் தினம் முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதை யொட்டி பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 முதல் ஜனவரி 19-ம் தேதி வரை, சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதற்கேற்ப அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்து நேற்று 28,022 பயணிகளும், இன்று 29,056 பயணிகளும் ஊர் திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தம் 42,917 பயணிகள் சென்னை திரும்புவதற்காக நாளை முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக 19 ஆம் தேதி சென்னைக்கு திரும்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றி இன்று முதல் பயணத்தை மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதற்காக இன்று தமிழ்நாடு முழுவதும் 3,412 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 4,302 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பேருந்துகளை பயன்படுத்தி, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஊர் திரும்பலாம்.
இதற்கிடையே, பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, நாளை பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 19.01.2025 அன்று பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம், செங்குன்றம், எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications