இதை வச்சு படமே எடுக்கலாமே! ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் தங்கம்! காவலாளி செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னை: குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை போட்டு சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது.
அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகைகள்
குப்பை தொட்டியை முதலில் பார்த்தவருக்கு உள்ளே எதோ மினுமினுப்பாக தெரிந்துள்ளது. என்ன இது மினுமினுப்பாக இருக்கிறது என்று பார்த்து, தொட்டியை தூக்கி உள்ளார். உள்ளே முழுக்க முழுக்க தங்க நகைகள். முதலில் இதை பார்த்ததும், எதோ கவரிங் நகையாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார். ஆனால் உற்று பார்த்தவர் அதை தங்கம் என்று உறுதி செய்துள்ளார். பல்வேறு நகைகள் இருந்ததால் கண்டிப்பாக இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று யூகித்துள்ளார்.

போலீஸ்
ஆனால் ஏடிஎம் காவலாளியாக இருந்தாலும், அதற்கு ஆசைப்படாமல்.. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 43 சவரன் மதிப்பு இன்றைய சென்னை விலைக்கு 16 லட்சம் ரூபாய் ஆகும். ஆனால் இந்த பணத்திற்கு ஆசைப்படாமல் உடனே போலீசில் அவர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் வந்த போலீசார் நகை பையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை
மேலும் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று பெண் ஒருவரின் பெற்றோர் அதற்கு முதல்நாள்தான் வாய்மொழியாக அதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். பின்னர் அந்த வீட்டிற்கு வந்து விட்டதாக போலீசிடம் தெரிவித்தனர்.

அதே பெண்
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போதுதான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து போலீசார் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்தான் நகை அனைத்தையும் குப்பை தொட்டியில் போட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாராட்டு
இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications