தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு.. 35,873 பேருக்கு தொற்று உறுதி.. அச்சுறுத்தும் கோவை!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 448 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 36,000-ஐ கடந்திருந்த நிலையில் இன்று தொற்று சற்று குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.

குறையும் பாதிப்பு
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

448 பேர் உயிரிழப்பு
இதனால் மொத்த பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 448 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 86 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 20,046 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 25,776 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 15,02,537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னை ஆறுதல்
2,84,278 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,66,639 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,55,86,237 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5559 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அச்சுறுத்தி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிதது வருகிறது.

அச்சுறுத்தும் கோவை
கோவையில் மட்டும் 3165 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1954 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1017 பேருக்கும், மதுரையில் 1352 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1621 பேருக்கும், திருவள்ளூரில் 1511 பேருக்கும், திருச்சியில் 1351 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1466 பேருக்கும், விருதுநகரில் 1287 பேருக்கும், ஈரோட்டில் 1758 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications