தமிழகத்தில் 36,000-ஐ கடந்த கொரோனா.. ஒரே நாளில் 467 பேர் உயிரிழப்பு.. சென்னையில் பாதிப்பு குறைகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

36,000-ஐ கடந்த கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் 14 நாள்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உயிரிழப்பு ஜெட் வேகம்
இதனால் மொத்த பாதிப்பு 17,70,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 109 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 19,598 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 24,478 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,76,761 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
2,74,629 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,953 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,54,19,598 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5913 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

கோவையில் ஆதிக்கம்
செங்கல்பட்டில் 2226 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாதிப்பு உள்ளது. கோவையில் மட்டும் 3243 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1145 பேருக்கும், மதுரையில் 1355 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1251 பேருக்கும், திருவள்ளூரில் 1667 பேருக்கும், திருச்சியில் 1331 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications