சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரத்திற்கு வந்தே பாரத் ரயிலில் செல்ல 380 ரூபாய்.. A to Z அறிய வேண்டியவை
சென்னை: உங்களிடம் 380 ரூபாய் இருந்தால் போதும், வந்தே பாரத் ரயில் எப்படி இருக்கும் என்பதையும், அதன் வசதிகள் மற்றும் பயண அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க 380 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக நாகர்கோவில் செல்ல ரூ.3240 கட்டணமாக வசூலிக்கப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூர் என 5 வந்தே பாரத் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கும் விழாவில் ஆளுநா் ஆர்.என் ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை - பெங்களூரு ரயில் சேவையை மதுரையில் இருந்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வீ.சோமண்ணா கலந்து கொண்டார். இந்நிலையில் இந்த இரண்டு ரயில்களும் செப்டம்பர் 2ம் தேதி முதல் ஓடத்தொடங்கும். இதற்கான நேர அட்டவணையும், கட்டணம் குறித்த விவரங்களையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை: சென்னை - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, 5:23 க்கு தாம்பரம் சென்றடையும். இதபோல் 6:52க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தையும். 8:55க்கு திருச்சி ரயில் நிலையத்தையும் அடையும். 9:53க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தையும், 10:38க்கு மதுரை ரயில் நிலையத்தையும் அடையும். மதுரையில் 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, பிற்பகல் 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும். சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.
நாகர்கோவில் -சென்னை வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மதியம் 2:20க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மாலை 3:18க்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கும், மாலை 3:58க்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தையும் அடையும். மாலை 5:03க்கு மதுரைக்கு வரும் வந்தே பாரத், 5:48க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தையும், 6:45க்கு திருச்சி ரயில் நிலையத்தையும், இரவு 8:53க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தையும், இரவு 10:28க்கு தாம்பரம் ரயில் நிலையத்தையும், இரவு 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். 16 பெட்டிகள் கொண்ட நாகர்கோவில் -சென்னை வந்தே பாரத் ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும்.
மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை: மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தையும், 6:50க்கு திருச்சி ரயில் நிலையத்தையும் சென்றடையும். 8:08க்கு கரூர் ரயில் நிலையத்தையும் , 8:32க்கு நாமக்கல் ரயில் நிலையத்தையும், 9:15க்கு சேலம் ரயில் நிலையத்தையும் சென்றடையும். மதியம் 12:50 மணிக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தையும், 1:00 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தையும் சென்றடையும். மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம் ஆகும். செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்
பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயில் நேர அட்டவணை: தினமும் மதியம் 1:30க்கு பெங்களூர் கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55க்கும், மாலை 4:50 க்கு சேலம் ரயில் நிலையத்தையும் அடையும். மாலை 5:38 க்கு நாமக்கல் ரயில் நிலையத்தையும், 5:58 க்கு கரூர் ரயில் நிலையத்தையும், இரவு 7:20 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தையும், 9:08க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தையும், 9:45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தையும் வந்தடையும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும்.
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கட்டண விவரம்:சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்வதற்கு, எழும்பூரிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.380 கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது 380 ரூபாய் இருந்தால், வந்தே பாரத் ரயிலில் பணிக்க முடியும். எழும்பூரில் இருந்து விழுப்புரத்திற்கு ரூ. 545 கட்டணமும், திருச்சிக்கு ரூ.955 கட்டணமும், திண்டுக்கல்லுக்கு ரூ.1105 கட்டணமும், மதுரைக்கு ரூ.1,200 கட்டணமும், கோவில்பட்டிக்கு ரூ. 1,350 கட்டணமும், திருநெல்வேலிக்கு ரூ.1,665 கட்டணமும், நாகர்கோவிலுக்கு ரூ. 1,760 கட்டணமாக வசூலிக்கப்படும்.
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய, சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.705 கட்டணமும், விழுப்புரத்திற்கு ரூ.1,055 கட்டணமும், திருச்சிக்கு ரூ.1,790 கட்டணமும், திண்டுக்கல்லுக்கு ரூ.2110 கட்டணமும், மதுரைக்கு ரூ. 2295 கட்டணமும், கோவில்பட்டிக்கு ரூ.2 620 கட்டணமும், திருநெல்வேலிக்கு ரூ.3055 கட்டணமும், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 240 கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் கட்டண விபரங்கள்: மதுரை - பெங்களூர் குளிர்சாதன வசதி இருக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.440 கட்டணமும், திருச்சிக்கு ரூ.555 கட்டணமும், கரூருக்கு ரூ.795 கட்டணமும், நாமக்கல்லிற்கு ரூ.845 கட்டணமும், சேலத்திற்கு ரூ.935 கட்டணமும், கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ. 1,555 கட்டணமும், பெங்களூர் கண்டோன் மெண்ட்டிற்கு ரூ.1,575 கட்டணமும் வசூலிக்கப்படும்.
மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.825 கட்டணமும், திருச்சிக்கு ரூ. 1,075, கரூருக்கு ரூ.1,480 கட்டணமும், நாமக்கல்லிற்கு ரூ. 1,575 கட்டணமும், சேலத்திற்கு ரூ.1,760 கட்டணமும், பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 835 கட்டணமும், பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து 865 கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications