“பூதமே” இறங்கிருக்கு.. 200 ஆண்டில் 3 வது முறை.. சென்னையில் இவ்ளோ பெரிய மழையா! 1996 ஐ மறக்க முடியுமா?
சென்னை: கடந்த 200 ஆண்டுகளில் 3 முறையாக சென்னையில் ஜூன் மாதம் ஒரே நாளில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை பெய்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் இருந்தே பரவலாக பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவில் விஸ்வரூபம் எடுத்து வெளுத்து வாங்கி இருக்கிறது. நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவில் மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது. குறிப்பாக சென்னை பெருங்குடி 14 வது மண்டலத்தில் 165 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் அடையாறு எகோ பூங்காவில் 158.7 மிமீ மழையும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரில் 156 மிமீ மழையும் பெய்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "1991, 1996 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளில்தான் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை சென்னையில் பொழிந்து இருக்கிறது. வேறு ஆண்டுகளில் இதுபோல் மழை பதிவானது கிடையாது. ஜூன் மாதத்தில் கனமழை பெய்வது மிக மிக மிக அரிதானது. மழை காரணமாக ஜூன் மாதம் இதுவரை 3 முறை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

1996 எப்போது சிறப்பானது. அந்த ரெக்கார்டை உடைக்க முடியாது. இன்று சென்னையில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பொழிந்து இருக்கிறது. இது மிகவும் அரிதானது. ஜூன் மாதம் இப்படி ஒரு மழை பெய்தது மிக மிக அரிது." என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள மழை விபரங்களின்படி, கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி செம்பரம்பாக்கத்தில் 251 மில்லி மீட்டர், ந்ங்கம்பாக்கத்தில் 184.4 மிமீ, செங்குன்றத்தில் 152 மிமீ மழை கொட்டி உள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டை வெதர்மேன் சிறப்பானது என்று சொல்ல முக்கிய காரணம் அந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி பெய்த பேய் மழைதான். தாமரைப்பாக்கத்தில் 450 மிமீ, சோழவரத்தில் 450 மிமீ, சென்னை துறைமுகத்தில் 348.3 மிமீ, நுங்கம்பாக்கம் 347 மிமீ, செம்பரம்பாக்கம் 346 மிமீ, பொன்னேரி 293 மிமீ, திருவிளாங்காஅடு 250 என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
அதற்கு பிறகு ஜூன் மாதத்தில் இந்த அளவுக்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இவ்வளவு பெரிய மழையை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, "மீனம்பாக்கம் (சென்னை) 137.6, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 117.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 109.5, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 82.0, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 79.0, நுங்கம்பாக்கம் (சென்னை) 67.4, குட் வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 50.0, புழல் (திருவள்ளூர்) 46.5, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 41.0, LMOIS கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 40.0, கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்) 35.5, மாதவரம் (சென்னை) 34.0" என சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications