3வது அலையா.. எல்லைகளில் தீவிரம்.. லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார்.. சுகாதாரதுறை அறிவிப்பு

தமிழகத்தின் எல்லைகளில் தீவிர கண்காணிப்புகள் நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் எல்லைகளில் தீவிர சோதனைக்கு பிறகே, பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதையடுத்து 3வது அலை பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிகாரகள் இறங்கி உள்ளனர்.

இப்போது தமிழகத்தில் ஓரளவு தொற்று குறைந்துள்ளது.. அதேசமயம், கேரளாவில் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. அங்கு 3-ம் அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

அடுத்த 10 நாள்களில் இப்போதுள்ள தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். அதனால் கேரளாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கையில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம்

தமிழகம்

இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தையும் 3வது அலை தாக்க வாய்ப்புள்ளது.. அதிலும் முதல் பாதிப்பே கோவைக்குதான் என்று வார்னிங் தரப்பட்டுள்ளது.. இப்போது கிட்டத்தட்ட 1,500 கொரோனா கேஸ்கள் தினமும் பதிவாகி வருகிறது.. 17,322 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்...

 படுக்கைகள்

படுக்கைகள்

ஒருநாளைக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட்கள் செய்யப்படுகின்றன. எனினும், முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதேசமயம் தளர்வுகள் இருப்பதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் தொற்று அதிகரிக்காமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆலோசனை

ஆலோசனை

அடுத்த 10 நாட்களுக்கு தமிழகம் மிகுந்த கண்காணிப்போடு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம். இதனிடையே, தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்..

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு எப்படி பாதுகாப்பாக வகுப்புகள் நடத்துவது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... எனவே, அண்டை மாநிலத்தில் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+