தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா- மதுரையில் 464 பேருக்கு பாதிப்பு! ஒரே நாளில் 66 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

4,328 patients test positive for Coronavirus in TN

இதில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் இன்று மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் 464 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர் மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

மாவட்டங்களில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:

  • செங்கல்பட்டு 8283
  • கோவை 1291
  • கடலூர் 1551
  • தருமபுரி 15 258
  • திண்டுக்கல் 789
  • ஈரோடு 422
  • கள்ளக்குறிச்சி 1847
  • காஞ்சிபுரம் 3979
  • கன்னியாகுமரி 1491
  • கரூர் 202
  • கிருஷ்ணகிரி 263
  • மதுரை 6539
  • நாகப்பட்டினம் 374
  • நாமக்கல்- 189
  • நீலகிரி 222
  • பெரம்பலூர் 177
  • புதுக்கோட்டை 673
  • ராமநாதபுரம் 1892
  • ராணிப்பேட்டை 1635
  • சேலம் 1967
  • சிவகங்கை 891
  • தென்காசி 721
  • தஞ்சாவூர் 709
  • தேனி 1863
  • திருப்பத்தூர் 431
  • திருவள்ளூர் 6930
  • திருவண்ணாமலை 3162
  • திருவாரூர் 767
  • தூத்துக்குடி 2385
  • திருநெல்வேலி 1875
  • திருப்பூர் 308
  • திருச்சி 1598
  • வேலூர் 2902
  • விழுப்புரம் 1602
  • விருதுநகர் 2099
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+