வேலை பறிபோகும் அச்சத்தில் லட்சக்கணக்கான அரசு ஆசிரியர்கள்.. TET தேர்வுக்கு நான்கு மடங்கு விண்ணப்பம்
சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களும் வேலையில் தொடர வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக இந்த முறை வழக்கத்தைவிட 4.80 லட்சம் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
நமதுநாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009 & ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8 ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011 -12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தேர்வு எழுத வேண்டும்
ஆனால் 2011ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு போட்டிதேர்வுகளின் மூலம் வென்று தேர்வான, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சிக்கல்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெறாமல் போனால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அதாவது கட்டாய ஓய்வளிக்கப்படுவார்கள். நாடு முழுவதும் பல லட்சம் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.
லட்சம் ஆசிரியர்களுக்கு பறிபோகும் வேலை
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநில அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட போகிறார்கள். அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். இதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் தகுதி தேர்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்கிற நிலை உள்ளது.
டெட் தேர்வு விண்ணப்பம்
இந்நிலையில் தான், இந்த ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 9ம் தேதி அவகாசம் முடிந்தது. ஆனால், செப்டம்பர் 10 (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த தேர்வுக்கு ஏராளமானோர் போட்டு விண்ணப்பித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளார்கள்.
ஆசிரியர் தகுதி தேர்வு எப்படி
ஆசிரியர் தகுதி தேர்வை பெறுத்தவரை இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்தது.
4.80லட்சம் ஆசிரியர்கள்
டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு ள்ளது. இதில் கடந்த 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வை எழுத சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் முதல் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தார்கள்.
மற்ற ஆண்டுகளில் நடந்த 4 தேர்வுகளிலும் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே பணியில் இருந்து, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான தேர்வு வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications