Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்கியது 30 ஆயிரம்.. வீட்டில் பல கோடி பணம் தங்கம்.. நாட்டையே ஆடிப்போக வைத்த அரசு ஊழியர்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: அரசு ஊழியர்களின் வீடுகளில் மூட்டை மூட்டையாகவும், கட்டுக் கட்டாகவும் பணம் சிக்கிய அதிரடி சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருப்பதை நீங்கள் பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி சார், இவ்வளவு பணத்தை வீட்டில் வைச்சிருக்கீங்க.. அதுவும் வெறும் 30 ஆயிரம், 40 ஆயிரம் வாங்கி இவ்வளவு சொத்து சேர்க்க முடியும் என நீங்களே கேட்டிருப்பீர்கள்.. அப்படியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. வெறும் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். அவரது வீட்டில் 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அண்மையில் ஒடிசா ஊழல் தடுப்புப் பிரிவு ₹30,000 லஞ்சம் வாங்கியதாக கட்டாக் வட்டாரச் சுரங்கத் துறை இணை இயக்குனர் தேபப்ரதா மொஹந்தியை கைது செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் புவனேசுவரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ₹4 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா ஊழல் தடுப்புப் பிரிவின் வரலாற்றிலேயே ஒரு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்சத் தொகை இதுதான்.

4 crores seized from the house of a government employee who took a bribe of 30 thousand in Odisha

இதுதவிர கட்டாக் வட்டாரச் சுரங்கத் துறை இணை இயக்குநர் தேபப்ரதா மொஹந்தியின் அலுவலக மேஜை டிராயரில் இருந்து ₹1.20 லட்சம் கண்டெடுக்கப்பட்டது. புவனேசுவரில் உள்ள இரண்டு அடுக்கு கட்டிடம் மற்றும் சுமார் 130 கிராம் தங்கம் உள்ளிட்ட பிற சொத்துக்களும் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அரியானா

ஒடிசாவை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகள் இதற்கு முன்பு நடந்துள்ளது. அந்த வகையில் 2025ம் ஆணடு ஊழல் தடுப்புப் பிரிவு வரலாற்றில் மிகப்பெரிய வேட்டை நடந்திருக்கிறது. அரியானா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு , ஒரு அரசு அதிகாரியின் வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் ₹5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கத்தை மீட்டது. இந்த அதிகாரி ஒரு டெண்டர் விடுவிப்புக்காக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.

ஜார்கண்ட்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ₹35 கோடி

முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரான விவேக் சந்திரா என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது அவரது வீட்டுப் பணியாளரின் அறையில் இருந்து மட்டும் ₹32 கோடியிலிருந்து ₹35 கோடி வரை ரொக்கப் பணம் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எண்ணுவதற்கே பல இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இது ஜார்க்கண்ட் மாநிலத்தை தாண்டி இந்தியாவையே உலுக்கியது.

கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் ₹8 கோடி

கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் (KSDL) தலைவராக இருந்த பாஜக எம்.எல்.ஏ மாடல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடல், ₹40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ₹8.12 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து உறுதியானது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கு வங்காளம்: கல்வித்துறை ஊழல் - ₹50 கோடி

இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இரண்டு வெவ்வேறு வீடுகளில் இருந்து மொத்தம் ₹50 கோடி ரொக்கம் மற்றும் ₹5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணமலை போலக் குவிந்து கிடந்த படங்கள் அப்போது வைரலானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+