முதலமைச்சரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட 4 மருத்துவர்கள்! காவேரி ஹாஸ்பிடல் சிகிச்சை விவரம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் 4 பேரும் அவரை கண்ணும் கருத்துமாக மிகுந்த கவனத்துடன் பார்த்துக்கொண்டனர்.
இதனால் தான் ஒரே வாரத்தில் அவரால் பூரண குணமடைந்து வீடு திரும்ப முடிந்துள்ளது.
மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் முதலமைச்சர் உடல்நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றியுள்ளனர்.

கொரோனா தொற்று
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மருத்துவர்கள் மோகன் காமேஸ்வரன், அரவிந்தன், எழிலன் எம்.எல்.ஏ., தீரஜ், ஆகியோர் கொண்ட குழு சிறப்பான சிகிச்சையை வழங்கியிருக்கிறது.
Recommended Video

கண்ணும் கருத்துமாக
முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் மருத்துவர் தீரஜ் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் ஆவார். இதனால் முதல்வர் அட்மிட் ஆனது முதல் அவருடனேயே இருந்து பார்த்து பார்த்து சிகிச்சை வழங்கியிருக்கிறார் இவர். இதேபோல் எழிலன் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் கூட அவர் காவேரி மருத்துவமனை மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரும் முதல்வர் உடல்நலம் மீது மிகுந்த அக்கறை எடுத்து சிகிச்சை வழங்கியிருக்கிறார்.

காவேரி மருத்துவமனை
இதேபோல் காவேரி மருத்துவமனை தலைவர் அரவிந்தன் மற்றும் மருத்துவர் மோகன் காமேஸ்வரனும் முதல்வருக்கு மிகுந்த கவனத்துடன் உயர்தர சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். இந்த நான்கு மருத்துவர்களின் பெயர்களையும் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலினே குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். என்னதான் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டாலும் மருத்துவர்கள் அளிக்கும் தன்னம்பிக்கையும் காட்டும் கவனிப்பும் தான் ஒரு நோயாளிக்கு முழு உற்சாகத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கறார் உத்தரவு
எல்லோருக்கும் உத்தரவு போடும் முதலமைச்சர் ஸ்டாலினால் மருத்துவர்கள் குழு போட்ட உத்தரவை மீற முடியவில்லை. ஒரு வார காலம் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்று தற்போது வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அரசு அலுவல் பணி மற்றும் கோப்புகளை கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications