4 லட்சம் பள்ளிக்குக் குழந்தைகளின் பல் காக்கும் ‘புன்னகை’
சென்னை: 'பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டம்" நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், புதியதாக 'புன்னகை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் பயிலும் 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல் பரிசோதனை செய்யப்படும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இதற்காக நந்தனத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
அப்போது அவர், "இந்தப் 'புன்னகை' என்ற புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளனர். 6 முதல் 8 வரை பயிலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பல் பரிசோதனை செய்ய உள்ளனர்.
இதன்மூலம் பிள்ளைகளின் வாய் சம்பந்தமான பொதுவான நோய்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாகப் பல் சொத்தை, ஈறு தொடர்பான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற உள்ளனர்.

இன்றைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோதே சென்னை அரசுப் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கு இதேபோன்று பல் பரிசோதனை செய்யப்பட்டது.
அதை மனதில் வைத்து இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தித் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கான கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளோம். இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரையிலான சுமார் 60% பிள்ளைகளுக்குப் பல் மற்றும் ஈறு சார்ந்த பிரச்சினைகள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்தமாக 60% அளவுக்குக் குழந்தைகளைப் பாதிக்கும் இந்தநோய்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை. ஆகவேதான் இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

'புன்னகை' என்ற இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாகச் சென்னையில் பயிலும் 54 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுகின்றவரையில் தொடங்கிவைத்துள்ளோம். இதன் மூலம் அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சி, அரசு நிதி பெறும் பள்ளிகள் என அனைத்தும் பயன்பெற உள்ளன. எங்களின் மருத்துவக் குழு, தொடர்ச்சியாக அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளது.

சென்னையில் பயிலும் இந்த 54 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை முடிவுற்ற பின்னர், 'தேசிய நலவாழ்வு குழும'த்தின் நிதி பங்களிப்போடு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்களுக்குப் பரிசோதனை தொடர்ந்து நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்பே மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்வரை அனைவருக்கும் தரமான மருத்துவம் என்ற லட்சியத்தோடு இந்த அரசு இயங்கிவருவதன் அடிப்படையில் 'புன்னகை' திட்டம் இப்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது" என்கிறார்
சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுவதைப் போல், இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பல் சொத்தையின் பாதிப்பு 64 முதல் 78% வரையிலும், நிரந்தரப் பற்கள் பாதிப்பு என்பது 18 முதல் 67% வரையிலும் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் குழந்தைகளைவிடப் பெண் பிள்ளைகளுக்குப் பற்சொத்தை பாதிப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications