லெக்கின்ஸ் பேண்ட்.. குதிரை வால் கொண்டை.. அசோக்குமார் மனைவி காமாட்சி செய்த வேலை இருக்கே.. அய்யய்ய
சென்னை: ஆள் பார்க்க படித்த, பேஷன் விஷயங்களில் கரைத்துக் குடித்த பெண் மாதிரி இருக்கிறார். டைட்டான லெக்கின்ஸ், அதுவும் முழங்காலுக்கு சற்று மேலே வரைதான் இருக்கிறது. குதிரை வால் கொண்டை போட்டிருக்கிறார். இவர் பெயர் காமாட்சி.
இவரது கணவர், அசோக்குமார், அவர்களின் கூட்டாளி ராஜவேல், அபிஷேக் பால் ஆகியோரும் பார்க்க செம புரபஷனலாக காட்சியளிக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு கும்பல் என்று சொன்னால் பார்ப்பவர்களால் நம்பவே முடியாது.

போலி கால் சென்டர்
ஆம்.. லேசுப்பட்ட மோசடி இல்லை. வித்தியாசமான மோசடியை அரங்கேற்றியுள்ளது இந்த கும்பல். அசோக்குமார்,அவரது மனைவி காமாட்சி, ராஜவேல்,மற்றும் அபிஷேக் பால் ஆகிய நான்கு பேரும் போலியாக ஒரு கால் சென்டரையே உருவாக்கி நடத்தி வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை.

பைனான்ஸ் கம்பெனிகள் பெயர்
இவர்களிடம் 8 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பல் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ் மற்றும் தமிழர் ஃபைனான்ஸ், போன்ற வெவ்வேறு பெயர்களில் மக்களை தொடர்புகொண்டு லோன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.

லோன் மோசடி
கடந்த ஜூன் மாதம் 2020ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த கனகலட்சுமி என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 82 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் இருந்து பெற்று தன்னை ஒரு கும்பல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் விசாரணையை ஆரம்பித்த காவல்துறை, அப்படியே நூல் பிடித்துச் சென்று இந்த கும்பலை கைது செய்துள்ளது.

மக்களே உஷார்
இந்த மோசடிக் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மக்களே.. யாராவது லோன் தரும் கம்பெனியிலிருந்து பேசுகிறோம் எனக் கூறி லோன் தருவதாக கூறி, பணம் கேட்டால், அவர்கள் திசையை பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிடுங்கள். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications