ஸ்டாலின் போட்டுத்தந்த "பாதை".. பாலோ பண்ணும் 4 மாநிலங்கள்! திகைத்து போன பாஜக.. டெல்லியில் புது ஆட்டம்
சென்னை: ஆளுநரை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு போட்டுத்தந்த பாதையை மற்ற மாநிலங்கள் பின்பற்ற போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான 4 மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை பின்பற்ற போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு மசோதாக்கள் நிலவை.. மதவாத பேச்சுக்கள்.. வரலாற்று ரீதியான தவறான கருத்துக்கள் என்று ஆளுநர் ஆர். என் ரவி மீது ஆளும் திமுக தரப்பு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.
அவருக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் விஷயம் ஆளுநர் ஆர். என் ரவி மசோதாவை டெல்லி அனுப்ப வேண்டும். அவருக்கு இருக்கும் முக்கியமான வேலை இது. இதை செய்ய அவர் தவறிவிட்டார் என்பது ஒரு புகார்.

இரண்டாவது புகார்
இரண்டாவது என்று பார்த்தால்.. ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சனாதனம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுக வைக்கும் இரண்டாவது குற்றச்சாட்டு.

ஆளுநர்
இது போக ஆளுநர் தனியாக துணை வேந்தர்கள் மாநாடு நடத்தியது, கோவை விவகாரத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக கூறியது உள்ளிட்ட சில விவகாரங்களும் திமுகவை கடுப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. இதெல்லாம் சேர்த்துதான் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்க காரணம். ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக சமீபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

ஆளுநர் விமர்சனம்
அதில் ஆளுநரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தன. அதன்பின் தற்போது ஆளுநரை திரும்ப பெற கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றது.இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து கையெழுத்து போட்டுள்ளனர். இதுதான் குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டது.

கேரளா
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த செயலை மற்ற சில மாநிலங்களும் பின்பற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளா, தெலுங்கானா, பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதே போன்று ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு வருகின்றன. தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசைக்கு, முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது. ஆளுநருக்கு வரவேற்பு கூட கொடுக்க விரும்பாத அளவிற்கு கேசிஆர் அங்கு கோபமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாநில ஆளுநராக உள்ள ஆரிப் முகமதுகானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

போராட்டம்
அங்கு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சொல்லும் அளவிற்கு ஆளுநர் அத்துமீறி வருகிறார். இதையடுத்து அங்கு முதல்வர் பினராயி விஜயன் ஆரிப் கானை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதையடுத்து அங்கு சிபிஎம் தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக நவம்பர் 15ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில் திமுகவும் கலந்து கொள்ள உள்ளது. அதேபோல் பீகாரில் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் கவர்னர் சவுகானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல்
இன்னொரு பக்கம் பஞ்சாப்பில் முதல்வர் பகவத் சிங்கிற்கும் கவர்னர் பன்வாரி லால் புரோஹித்திற்கும் மோதல் உச்சம் தொட்டு உள்ளது. இப்படி அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் மோதல் நிலவுகிறது. மேற்கு வங்க கணவர் இல கணேசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் ஆக்டிவாக இல்லை. மற்ற 4 மாநிலங்களில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் மோதல் உள்ள நிலையில் அவர்களும் இதேபோல் ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் விரைவில் மனு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர்கள் அத்துமீறும் விவகாரத்தை தேசிய அளவில் டெல்லிக்கு கொண்டு செல்ல பாஜக அல்லாத மாநில அரசுகள் முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை!












Click it and Unblock the Notifications