அடிச்சது ‘லக்’.. மேயர்களாக ‘அப்கிரேட்’ ஆகும் 4 நகராட்சி தலைவர்கள்.. அதுலயும் ஹைலைட்டே இதுதான்!
சென்னை: தமிழ்நாட்டில் 4 நகராட்சி தலைவர்களுக்கு 'லக்' அடித்துள்ளது. தமிழக முதலமைச்சரின் அறிவிப்பால், 4 நகரசபை தலைவர்கள் மேயர்கள் ஆகின்றனர். 4 பேருமே திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேயர்களாக 'அப்கிரேட்' : நகராட்சிகள் மாநகராட்சிகளாக 'அப்கிரேட்' செய்யப்பட்டுள்ளதால், நகரசபை தலைவர்கள் மேயர்கள் ஆகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டில் நகராட்சி தலைவர்களாகப் பதவியேற்ற அவர்களின் பதவி காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், இவர்கள் நால்வரும் மேயர்களாக பொறுப்பு வகிப்பார்கள்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம், மேயர்கள் ஆகும் நால்வரும், மேயர்கள் அணியும் கோட் அணிந்து, அவையை நடத்துவார்கள். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 25 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 24 மாநகராட்சிகளில் திமுக மேயர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயரும் பதவி வகிக்கின்றனர்.
காரைக்குடி: காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி 2015ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையிலான நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பின்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கற்பகம் அதிமுகவை சேர்ந்தவர்.
இந்நிலையில், தற்போது காரைக்குடி மாநகராட்சி ஆகியுள்ளது. காரைக்குடி நகராட்சி தலைவராக இருக்கும் முத்துதுரை காரைக்குடி மாநகராட்சியின் முதல் மேயர் ஆகிறார். நகராட்சி துணைத் தலைவராக இருக்கும் குணசேகரன், துணை மேயர் ஆகிறார்.
புதுக்கோட்டை: தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் புதுக்கோட்டை நகராட்சி வரலாறு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை விளங்கியது. கடந்த 1912-ம் ஆண்டு அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது.
தற்போது புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். நீண்ட பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திலகவதி செந்தில் புதுக்கோட்டையின் முதல் மேயர் ஆகிறார்.
நாமக்கல்: நாமக்கல் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த கலாநிதி செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத நகராட்சியாக நாமக்கல் உள்ளது. மொத்தம் உள்ள 39 வார்டுகளில் திமுக ஆதரவு சுயேட்சைகள் இருவர் போட்டியின்றி தேர்வாகினர். 37 வார்டு கவுன்சிலர் தேர்தல் நடந்த நிலையில், 36 வார்டுகளை திமுக கைப்பற்றியது. 1 இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
அதிமுக கவுன்சிலர் பதவியேற்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு திமுகவில் இணைந்தார். இதன் மூலம் நாமக்கல் நகராட்சி வரலாற்றிலேயே எதிர் கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாநகராட்சி ஆகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களே இல்லாத மாநகராட்சியாக நாமக்கல் உள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த நிர்மலா வேல்மாறன் பதவி வகித்து வருகிறார். திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உருவாகும் நிலையில், அதன் முதல் மேயர் ஆகிறார் திமுகவின் நிர்மலா வேல்மாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications