ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்த 4 அதிகாரிகளை தேர்தல் பணியில் இருந்து விடுவித்த தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என எழுத்தாளர் எஸ் விஜயன் எழுதிய புத்தகம் நேற்று வெளி வருவதாக இருந்தது. இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் நேற்று நடக்க இருந்தது.

தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் அந்த புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்ததாகவும் விழாவையும் தடுத்து நிறுத்த உத்தரவிட்டதாகவும் தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

பறிமுதல்

பறிமுதல்

இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விழா நடைபெறுவதற்கு முன்னரே புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உத்தரவு

உத்தரவு

இதையடுத்து தமிழக தலைமை அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அது போல் தலைமை தேர்தல் ஆணையமும் சத்யபிரதசாஹூவிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்டுள்ளதாகவும் புத்தகங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

ஆணையம்

ஆணையம்

இதையடுத்து அந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் ரபேல் புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விடுவிப்பு

விடுவிப்பு

கடையில் புத்தகங்களை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர்கள், 2 காவலர்கள் ஆகியோர் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை

அறிக்கை

புத்தகத்தை பறிமுதல் செய்த 4 பேரிடமும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புத்தகம் தடை, பறிமுதல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+