4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்.. எழுத்துபூர்வமாக அறிக்கை தர கேட்ட மாணவிகள்.. ஒப்புக் கொண்ட கலாஷேசத்ரா
சென்னை: கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதாக மாணவிகளிடம் வாய்மொழியாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு கல்லூரி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது.
சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.
இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்கள்.

உதவி பேராசிரியர்
இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வெகுண்ட மாணவிகள்
இதனால் வெகுண்டெழுந்த மாணவிகள் கலாஷேத்ரா கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விசாரணை
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தியுள்ளார். அவரிடம் மாணவிகள் தனித்தனியாக வந்து பாலியல் சீண்டல்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மாணவிகளிடம் இருந்து புகார்களும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. புகாருக்குள்ளானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமறைவு
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். மேலும் மற்ற 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் விடக் கூடாது என மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார். இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுமுறை
வரும் ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி கல்லூரிக்குள் செல்ல மாட்டோம் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரிக்குள் வர முடியாது
இதுகுறித்து அவர் கூறுகையில் பாலியல் புகாருக்குள்ளானவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது கல்லூரிக்குள் ஏப்ரல் 5 ஆம் தேதி திரும்ப முடியாது. எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எப்படி கல்லூரிக்குள் செல்ல முடியும் என மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேராசிரியர்கள் டிஸ்மிஸ்
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து கைதான ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் மன நல ஆலோசகரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழி கூறப்பட்டுள்ளது. அவர்களது டிஸ்மிஸ் குறித்து கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எழுத்துப்பூர்வமாக நடவடிக்கைகள் தேவை என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறுதியில் பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications