Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருகம்பாக்கத்தில் எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி அரைத்து சாப்பிட்ட நான்கு பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையி வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிப்பது சாதாரணம்.. யார் யார் என்றே தெரியாதவர்கள், இப்படி ஒன்றாக ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருப்பார்கள். கிட்டத்தட்ட பிஜி பாணியில் தான் வீட்டை வாடகைக்கு எடுக்கும் பெண், தன் வாடகையை ஷேர் செய்வதற்காக, தன்னை போன்றவர்களை சேர்த்துக் கொள்வார். அப்படி ஒன்றாக இருந்த பெண்கள், எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி அரைத்து சாப்பிட்டதால் நிலைமை சிக்கல் ஆகி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம், விவேகானந்தா தெருவில் 7 பெண்கள் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். இவர்களில் நிகிதா (வயது 20), மதுமிதா (21) ஆகிய இருவரும் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சவிதா (21), தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் இவர்களுடன் தங்கி உள்ள சாயிரா (21) என்பவர் தேங்காயில் எலி மருந்தை தடவி வைத்திருக்கிறார்.

4 women in Virugambakkam who prepared and consumed chutney made from a coconut laced with rat poison

இதை அறியாத நிகிதா, நேற்று எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி அரைத்து காலை உணவு சாப்பிட்டு உள்ளார். அதனை சாப்பிட்ட சாயிரா உள்ளிட்ட 4 பெண்களுக்கும் தலை சுற்றல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிது அப்போதுதான் எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி அரைத்து இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக 4 பெண்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்

எலி மருந்து தடவிய தேங்காயில் சட்னி அரைத்து சாப்பிட்டால் என்னாகும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறிய தகவலை பார்ப்போம். நிச்சயமாக, உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அது அவர்கள் சாப்பிட்ட நச்சின் அளவு, மருந்து எந்த வகையானது, மற்றும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது தான் .

எலி மருந்துகளில் பல வகைகள் உள்ளன (எ.கா: ஆன்டிகோகுலண்ட்ஸ் , துத்தநாக பாஸ்பைடு போன்றவை). இதில் சில நச்சுகள் மிகக் குறைந்த அளவில் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, இத்தகைய சூழலில் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்வது மிக அவசியம் ஆகும்

எலி மருந்து சாப்பிட்டால் உடலில் என்ன சிக்கல்கள் வரும்?

எலி மருந்தின் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கும்போது கடுமையான வயிற்று வலி, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இது நச்சுத்தன்மை உடலில் வேகமாகப் பரவுவதற்கான அறிகுறியாகும். சில வகை எலி மருந்துகள் (ஆன்டிகோகுலண்ட்ஸ்) இரத்தத்தை உறைவதை தடுக்கின்றன. இதனால் உடலில் உட்புற இரத்தப்போக்கு ஏற்படலாம். முகம், ஈறுகள் அல்லது சிறுநீரில் இரத்தம் வெளியேறலாம்.
தலைச்சுற்றல், மயக்கம், குழப்பம், தசை பலவீனம் மற்றும் மிக மோசமான நிலையில் வலிப்பு மற்றும் கோமா ஏற்படலாம்.

இந்த நச்சுக்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அந்த உறுப்புகள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செயலிழக்கக்கூடும். நச்சுத்தன்மையின் தாக்கத்தால் இதயத் துடிப்பில் சீரற்ற மாற்றங்கள் ஏற்படலாம். உடனடியாக அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஆம்புலன்ஸை அழைக்க தயங்கக்கூடாது. அந்த எலி மருந்தின் பாக்கெட் அல்லது அதன் பெயரைப் புகைப்படம் எடுத்து அல்லது கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இது மருத்துவர்கள் சரியான 'ஆன்டிடோட்' ( நச்சு முறிவு மருந்து) வழங்க உதவும்.

அதேபோல் பல நேரங்களில் எலி மருந்து சாப்பிட்டவர்கள் உடனடி அறிகுறியை தெரியாது . 2-3 நாட்கள் கழித்தே வாந்தி அல்லது வயிற்று வலி வரும். அந்த நேரத்தில் விஷம் ரத்தத்தில் கலந்து, கல்லீரல் முழுமையாகச் செயலிழந்திருக்கும். கல்லீரல் செயலிழந்த பின் காப்பாற்றுவது மிகக் கடினம். பொதுவாக விற்கப்படும் 'மஞ்சள் பாஸ்பரஸ்' போன்ற எலி மருந்துகள் கல்லீரலை நேரடியாகத் தாக்கும். இதற்கு நேரடியான 'ஆன்டிடோட்' (நச்சுமுறிவு மருந்து) கிடையாது என்பதால் உயிரிழப்பு விகிதம் அதிகம்.

திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்

அதேபோல் வேண்டுமென்றே தற்கொலைக்கு முயல்பவர்கள் அதிக அளவில் உட்கொள்வார்கள். ஆனால் சட்னி போன்ற உணவுகளில் தெரியாமல் கலக்கும்போது நச்சின் அளவு குறைவாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. சாப்பிட்ட சில மணிநேரங்களிலேயே மருத்துவமனைக்குச் சென்று 'வயிறு கழுவப்பட்டால்' , நச்சு ரத்தத்தில் கலப்பதற்கு முன்பே வெளியேற்றப்பட்டுவிடும். எனவே அப்படியான சூழலில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதேநேரம் 'மஞ்சள் பாஸ்பரஸ்' எலி மருந்தை எந்த காலத்திலும் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக குழந்தைகள் உள்ள வீடுகளில் ஒரு போதும் வாங்கிவிடாதீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+