"முண்டம்".. தினகரன் கிட்ட "அவங்க" பேசினாங்களாமே.. முட்டி போட்டதை மறந்த எடப்பாடி.. சிஆர் சரஸ்வதி நறுக்

எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து சிஆர் சரஸ்வதி நம்மிடம் கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விருப்பம் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? என்று அமமுகவின் சிஆர் சரஸ்வதி கொந்தளித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

 குஷி சந்தோஷம்

குஷி சந்தோஷம்

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சிஆர் சரஸ்வதி நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் வெளிப்படுத்தி உள்ள கருத்துக்கள்தான் இவை:

 யாருங்க இவர்?

யாருங்க இவர்?

"எந்த காலத்திலும் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும், அதிலும் எடப்பாடி பழனிசாமியுடன் சேரவே மாட்டோம் என்பதையும் எங்கள் பொதுச்செயலாளர் தினகரன் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஏனென்றால், எடப்பாடி முதல்வர் ஆனதுமே மக்கள் கேட்ட கேள்வி, "யாருங்க இவர்?" என்பதுதான்.. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்போம் என்று தினகரன் எப்போது சொன்னார்? எங்கே சொன்னார்? 1 சதவீதம்கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி சொல்கிறாரே.. ஆனால், கால் பர்சனட்கூட, எடப்பாடியை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று இன்றைக்கு எங்கள் பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார்.

நிலுவைகள்

நிலுவைகள்

அவரை சேர்த்துக் கொள்ள முதல்ல நாங்க தயாராக இல்லை.. நாங்க எதுக்கு அவர்கிட்ட போக போறோம்.. அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று எடப்பாடி சொல்கிறாரே? முதல்ல அதிமுகவுக்கு யார் தலைவர்? யார்கிட்ட கட்சி இப்போது இருக்கிறது? வழக்குகள் இன்னும் முடியவில்லை.. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தந்த கேஸ்கள் நிலுவையிலேயே இருக்கின்றன.. தேர்தல் ஆணையத்திலும் எந்த முடிவும் வரவில்லை.. சின்னம்மா தாக்கல் செய்த அதிமுக பொதுச்செயலாளர் வழக்கும் நிலுவையில் இருக்கு.. இதெல்லாம் முடிவுக்கு வர வேண்டும்.. கோர்ட் சொல்லணும், தேர்தல் ஆணையம் சொல்லணும்..

முண்டம்

முண்டம்

எல்லாத்துக்கும் மேலாக தொண்டர்கள் சொல்லவும்.. யார் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதை அதிமுக சட்டவிதிகளின்படி தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும்.. இவ்வளவும் பார்த்துதான், அதிமுக தலைமை யார் என்பதை சொல்ல முடியும்.. தலையில்லாத "முண்டமாக" அதிமுக இருக்கிறது அழகாக எங்கள் தலைவர் சொன்னார்.. மறுபடியும் அம்மா ஆட்சி வரவேண்டும் என்பதில் எங்கள் பொதுச்செயலாளர் கடந்த 2021லேயே தயாராக இருந்தார்.. டெல்லியில் இருந்து சில நலம்விரும்பிகளும் எங்கள் பொதுச்செயலாளரை இதற்காகவே வந்து சந்தித்து பேசினார்கள்..

 40 + 60 சீட்கள்

40 + 60 சீட்கள்

அமமுக கூட்டணியில் அமமுக சேர வேண்டும், திமுக மட்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று அவர்கள் பேசி, அதற்கு பொதுச்செயலாளரும் சம்மதித்தார்.. "எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை நம்பி உள்ள 40 பேருக்கு சீட் தரணும்" என்று வாய்ப்பு கேட்டார்.. ஆனால், யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் இவர் மறந்து, கூவத்தூரையும் மறந்து, முட்டி போட்டதையும் மறந்து, நான் யாரையுமே சேர்த்துக்க மாட்டேன், நான் நான் என்ற மமதையில் எடப்பாடி தேர்தலை சந்தித்தார்.. என்ன ஆச்சு? 60 சீட் வாங்கிட்டோம் என்பது பெரிசல்ல..

 கொங்கு பெல்ட்

கொங்கு பெல்ட்

ஆளும் கட்சியாக வருவதுதான் பெரிசு.. பணபலம், படைபலத்துடன், எதிர்க்கட்சியாக எப்படி அந்த பதவிக்கு வந்தார் என்பதை எல்லாருமே பார்த்தாங்க.. அந்த பதவியிலும்கூட, சாதி அரசியல் ஆக்கிட்டாரு.. எப்ப பார்த்தாலும் கொங்கு பெல்ட்தான்.. அம்மாவுக்கோ, புரட்சித்தலைவருக்கோ சாதியே கிடையாது.. அதிமுக தமிழகத்தின் பெல்ட்.. ஆனால், இவர் அமமுகவுக்கு 1 சதவீதம்கூட இடமில்லை என்கிறார்.. எடப்பாடிக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று எந்த காலத்திலுமே சொன்னதில்லை, பிறகு எப்படி அந்த வார்த்தையை சொன்னார் என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+