முகூர்த்த நாள்+ வீக்கெண்ட்.. பக்கா பிளான் போட்ட தமிழக அரசு.. நெரிசல் இன்றி பயணிக்க 400 ஸ்பெஷல் பஸ்!
சென்னை: வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பொதுமக்கள் வெளியூர் சென்று திரும்பி வருவதற்கான சிறப்பு ஏற்பாடாக நாளை (செப்டம்பர் 1) 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் அதற்கு முந்தைய 2ஆம் தேதி சனிக்கிழமை, 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) ஆகிய நாட்களிலும் வெளியூர்களுக்குச் செல்ல பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "02/09/2023 (சனிக்கிழமை), 03/09/2023 (ஞாயிறு) விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு 01/09/2023 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 11,187 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 01/09/2023 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதோடு பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,114 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு http://www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களுடன் சேர்த்து சுப முகூர்த்த நாட்களும் வருவதால் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி ) 400 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications