கருணாநிதி கோட்டைக்கு போனது எப்படி.. "சூத்திரதாரி" எடப்பாடியுடன் திமுக.. போட்டு உடைத்த மருது அழகுராஜ்
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திமுக அரசு ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? திமுகவுடன் நெருக்கமாக இருப்பது எடப்பாடிதான் தவிர, ஓபிஎஸ் கிடையாது என்று அதிமுகவின் மூத்த தலைவர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் எடப்பாடி இடையே, அதிமுகவில் தற்சமயம் பிளவு காணப்பட்டுள்ளது.. எனவே, எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு விட்டதாகவும், புதிய எதிர்கட்சி தலைவராக உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஓபிஎஸ்ஸும் கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்றும் எதிர்கட்சி துணை தலைவர் பதவியை யாருக்கும் மாற்றவில்லையென தெரிவித்திருந்தார்.

நெருக்கம்
இதுகுறித்து விரைவில் சட்டமன்ற கூட்டத்தில் தெரியவரும் என்பதால், அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த தலைவருமான மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது, அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு ஆளுமை திறன் குறைவாக உள்ளதா? திமுகவுடன் ஓபிஎஸ் நெருக்கம் காட்டுகிறாரா? என்பது உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு மருது அழகுராஜ் அளித்த பதில்கள்தான் இவை:

டபுள் லீடர்
"ஓபிஎஸ் சொல்வது என்னவென்றால், இப்போதைக்கு தேர்தல் நடத்தி இருவருமே இரட்டை தலைமையாக தேர்வு செய்யப்பட்டுவிட்டோம்.. அதிமுகவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இனி என்ன செய்ய வேண்டும்? வெற்றி பெற்ற திமுகவின் தவறுகளை, பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் கூனிக்குறுகி நிற்கும் திமுகவின் துணைகளை, மக்களிடம் கொண்டு சென்று, திமுகவிற்கு எதிரான அரசியலை வெகுவாக பெரிதாக கொண்டு சென்று, 2024 வெற்றிக்காகத்தானே பாடுபட வேண்டும்? ஆனால் உட்கட்சி யுத்தத்தை தப்பான தருணத்தில் துவங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி..

ஹிட்லர் ஹிஸ்டரி
2ம் உலகப்போரில் ஹிட்லர் தப்பான தருணத்தில், தவறான பருவத்தில், பனிப்போரில் சிக்கி அழிந்தே விட்டார் என்பது வரலாறு.. எப்பவுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கட்சியை உடையாமல் பார்த்து கொள்ளவேண்டும்.. புரட்சித்தலைவர் முதல்வராக இருந்தபோதே, நமது கழகம் என்ற பெயரில் கட்சி உடைந்தது.. ஆனால், 10, 11 வருஷம் ஆட்சியில் இல்லாத கலைஞர், தன் கட்சியை உடையாமல் பார்த்து கொண்டார்.. அதன்விளைவுதான், புரட்சித்தலைவர் மரணம் வரை காத்திருந்து, கலைஞரால் கோட்டைக்கு போக முடிந்தது..

கேள்வி 1
ஆனால், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கட்சியை உடைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஒற்றைதலைமை கற்பனை என்று சொல்லிவிட்டு, அடுத்த 10வது நாளே, கட்சியை உடைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அதிமுக உடைவதால் திமுகவுக்குதானே சாதகம்? திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை.. திமுகவில் தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? கொடநாடு கொலைக்கு சூத்திரதாரி, குற்றவாளி எடப்பாடிதான்.. எங்களிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 நாளில் அவரது முகமூடியை கிழித்து, குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னார்களா இல்லையா?

கேள்வி 2
ஒன்றரை வருடமாகிறது.. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய எடப்பாடியின் இடதும், வலதுமான சேலம் இளங்கோவனை இன்றுவரை விசாரிக்கவில்லையே ஏன்? அன்றைக்கு உள்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடியை அழைத்து, கொடநாடு பேரிகாட் ஏன் நீக்கப்பட்டது? நடக்கிற கொலைகள் எல்லாம் சேலத்தை சுற்றியே நடக்கிறதே? 20 வருடமாக வைத்திருந்த மாவட்ட செயலாளர் பதவியை இளங்கோவனுக்கு தர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? இத்தனை சந்தேகங்கள் இருக்கும்போது, ஏன் இதுவரை எடப்பாடியிடம் விசாரணை நடக்கவில்லை.

கேள்வி 3
எடப்பாடியின் 41 ஆயிரம் கோடி ஊழல் பற்றி ஜேசிடி பற்றி சொல்லியுள்ளார்.. ஆதாரம் இல்லாமல் அவர் சொல்லியிருக்க மாட்டார்.. அந்த ஊழலை வெளிப்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்.. காத்திருங்கள்.. மக்கள் பணத்தை திருடினார்கள் என்று எங்கள் தரப்பே சொல்லும்போது, திமுக அரசு ஏன் இதுவரை எடப்பாடி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.. கட்சிக்காரர்களுக்கு எடப்பாடி எதையுமே செய்யவில்லை.. ஸ்மார்ட் சிட்டியில் 2 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று செந்தில்பாலாஜி சொன்னாரே.. இப்போ அந்த பேச்சையே காணோமே ஏன்?" என்று கேள்விகளை எழுப்பினார்.












Click it and Unblock the Notifications