சென்னையில் 3 ஆவது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
சென்னை: சென்னையில் 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4533 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதாவது மருத்துவமனைக்கு வந்தவர்களை போல் 100 சதவீதத்திற்கும் மேலான நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.
இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை
இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 35 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,602 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். இதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 94 பேர் பலியாகிவிட்டனர்.

ஈரோடு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கும் செங்கல்பட்டில் 1028 பேருக்கும் சென்னையில் 4250 பேருக்கும் கோவையில் 1038 பேருக்கும் கடலூரில் 241 பேருக்கும் தருமபுரியில் 153 பேருக்கும், திண்டுக்கல்லில் 199 பேருக்கும் ஈரோட்டில் 515 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி
காஞ்சிபுரத்தில் 558 பேருக்கும் கன்னியாகுமரியில் 301 பேருக்கும் திருவள்ளூரில் 885 பேருக்கும் திருவண்ணாமலையில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5399 பேருக்கும் செங்கல்பட்டில் 75032 பேருக்கும் கோவையில் 74288 பேருக்கும் சென்னையில் 314074 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

60 வயது
12 வயதுக்குட்பட்டவர்களில் 19604 ஆண்களுக்கும் 20158 பெண்களுக்கும் என 39762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 13 முதல் 60 வயதுடையோரில் 547036 ஆண்களும் 358041 பெண்களும் 60 வயதை கடந்தோரில் 96132 ஆண்களுக்கும் 56663 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications