அப்படி போடு! 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. 38,000 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கேபினட் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் இன்று நடைபெற்ற கூட்டம் மிகுந்த கவனம் பெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

chennai employment cm stalin

அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46 ஆயிரத்து 931 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-- முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், 38,698.80 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் 46, 931 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மின்னனு துறை, சார்ந்த பிரினெ டெட் சார்க்யூட் போர்டுகள், குறைந்த மின்னழுத்த பேனல்கள், செல்போன் தயாரிப்புகளுக்கான உதிரி பாகங்கள், , பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி சார்ந்த உதிரி பாகங்கள், தோல் அல்லாத காலணிகள் உள்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார் லிமிடெடு (900 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி லிமிடெடு நிறுவனம் 13,180 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் திருவண்னாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெடு நிறுவனம் ரூ.10 ஆயிரத்து 375 கோடி முதலீடு செய்கிற்து. இதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

chennai employment cm stalin

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுரில் அசெண்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.612.60 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுபோல மேலும் சில நிறுவனங்கள் முதலீடு செய்யும் விவரங்களும் வெளியாகியுள்ள. இன்று நடைபெற்ற கேபினட் கூட்டம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.38,698.8 கோடி மதிப்பிலான14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+