‛‛இதுதான் ராமர் பாலம்’’.. எப்படி இருக்கு பாருங்க.. ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்த போட்டோ.. வாவ்
சென்னை: தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கிலோமீட்டர் நீளத்துக்கு இருந்ததாக கூறப்படும் ராமர் பாலத்தின் எழில்மிகு போட்டோவை ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்துள்ளது. இந்த போட்டோ தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது.
ராமர் பாலம்.. காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விவகாரம். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் இந்த பாலம் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் பாம்பன் தீவுக்கும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக கூறப்படுகிறது.

இது இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கே), வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து (வடக்கில்) பிரிக்கும் வகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த ராமர் பாலத்தை ராம சேது, ஆதாம் பாலம் எனவும் அழைப்பார்கள். இந்த பாலம் குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான தகவல்களை கூறி வருகின்றனர். இதனால் தான் ராமர் பாலம் என்பது காலம் காலமாக விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. புராணங்கள் அடிப்படையில் இது ராமரின் ராணுவ படையால் கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது ராமரின் மனைவி சீதாவை ராவணன் இலங்கையில் சிறை வைத்தார். இந்த வேளையில் சீதாவை மீட்க ராமர் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை செல்லும் வகையில் அனுமான் மற்றும் அவரது படைகள் மூலம் இந்த ராமர் பாலம் கட்டமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்து அமைப்பினர், பாஜகவினர் குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமி இதனை தேசிய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளையில் இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது கடலுக்கு நடுவே மணல் திட்டுகள் உள்ளன. இந்த திட்டுகளில் தான் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த மணல் திட்டுகள் பாலம் போன்றும் இந்தியா- இலங்கை இடையே பயன்படுத்தப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு வரை இந்த பாலம் இருந்ததாகவும், அதன்பிறகு புயல்களால் இந்த பாலம் சீர்குலைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ராமர் பாலம் தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதாவது நம் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் மன்னார் தீவுக்கு இடையே ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் இடத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கோப்பர் நிக்கஸ் சென்டினல் - 2 என்ற செயற்கைகோள் படம் பிடித்ததாக கூறி இந்த போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் என்பது நிலத்தின் கட்டமைப்புகளை படம்பிடித்து வழங்கி வருகிறது. இதற்காக செயற்கைகோளில் 13 ஸ்பெக்ட்ரல் பேண்ட்ஸ் பட்டைகள் கொண்ட உயர் தெளிவு திறன் கொண்ட மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜர் (Innnovative wide swath high-resolution multispectral imager with 13 spectral bands) உள்ளது. இந்த இமேஜரை பயன்படுத்தி தான் ராமர் பாலத்தின் போட்டோ விண்வெளியில் இருந்தபடி படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டோ எழில் மிகுந்து காணப்படுகிறது. அதாவது இந்தியாவும், இலங்கையும் பசுமையாக காட்சியளிக்க இருநாடுகள் இடையே நீலநிற கடல்நீருக்கு நடுவே வெள்ளை நிறத்தில் திட்டுக்கள் தெரிகின்றன. இந்த திட்டுக்கள் தான் ராமர் பாலம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications