"4800 கோடியாமே".. இதோ வர்றாங்க.. எடப்பாடிக்கு இருக்கு.. ஓபிஎஸ்ஸிடம் ஓடிவரும் அதிமுக: மருது அழகுராஜ்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவுகள் நாளுக்கு நாள் பெருகி வருவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு சர்வாதிகாரத்தை பழனிசாமி தனது பணத்தால் கட்டமைக்க முயற்சிக்கிறார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். அதிமுகவின் தலைமையை தொண்டர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
கட்சி எம்எல்ஏக்கள் 66 பேரில் 63 பேர், எம்பிக்கள் 5 பேரில் 4 பேர், பொதுக்குழு 2600, மா.செ.க்களில் 99 சதவீதம் எடப்பாடி கையில் உள்ளதாக தகவல்கள் பரபரத்து வந்த நிலையில், அதிமுகவே எடப்பாடி பக்கம் சென்றுவிட்டது, ஓபிஎஸ் பக்கம் யாருமே இல்லை என்ற செய்திகளும் கடந்த 2 மாத காலமாகவே மீடியாவை ஆக்கிரமித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுகள் கட்சிக்குள் நிறைய உள்ளதாக சொல்லப்பட்டு வரும் அதேசமயம், ஓபிஎஸ் மீதான நியாயங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

சாக்கு

சாக்கு

இதைப்பற்றி ஓபிஎஸ் தரப்பில் சொல்லும்போது, "கட்சி எடப்பாடியிடம் இருக்கிறதாக சொல்கிறார்கள்.. உள்ளது.. கட்சி விதிகள் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக இருக்கிறது.. இதற்கு தீர்வு கோர்ட்டில் கிடைக்காது.. அரசியல் பிரச்சனைகளுக்கு அரசியல் சார்பாகத்தான் தீர்வு கிடைக்கும்.. ஓபிஎஸ் எவ்வளவோ இறங்கிவந்தும், எடப்பாடிதான் பிடிவாதமாக இருக்கிறார்.. கட்சியின் நலன் முக்கியம் என்றால், அவர் எப்போதோ இந்த பிரச்சனையை விட்டுத்தந்திருக்கலாம்" என்கிறார்கள்.

 நியாயங்கள்

நியாயங்கள்

அதற்கேற்றபடி, ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியும் புழலுக்கும், ஓ.பன்னீர்செல்வம் புனித ஜார்ஜ் கோட்டைக்கும் செல்லும் காலம் உருவாகும் என்று விடாமல் சொல்லி கொண்டிருக்கிறார். 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கு முதல் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வரை தன்னை நோக்கி அலையடிக்கும் விவகாரங்களில் இருந்து தப்பிக்க அண்ணா திமுகவின் தலைமைப் பீடம் தான் தனக்கான பதுங்கு குழி என நினைக்கிறார், சிலுவையில் ஏற்றத் துடிக்கும் சிலுவம்பாளையத்து அதிகாரப் பித்தர், என்றெல்லாம் விமர்சனங்களை அள்ளி வீசி வருகிறார்.

 வெயிட் & சீ

வெயிட் & சீ

தற்போதுகூட ஒரு யூடியூப் சேனலுக்கு மருது அழகுராஜ் பேட்டி தந்துள்ளார்.. அதில், எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகளையும், ஓபிஎஸ் மீதான நியாயங்களையும் எடுத்து வைக்கும் முக்கிய கருத்துக்கள் இவைகள்தான்: "தினகரன் பின்னாடி யாருமே இல்லைன்னு அன்னைக்கு எடப்பாடி சொன்னாரு.. சசிகலா பின்னாடி யாருமே இல்லைன்னு சொன்னாரு.. இன்னைக்கு 3.5 ஓட்டு சதவீதத்தை அமமுக வாங்கியிருக்கிறதே.. அதிமுக இன்னைக்கு ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதுக்கு இந்த வாக்கு வாங்கியும் ஒரு காரணம் இல்லையா?

 மன்னிச்சிடுங்க

மன்னிச்சிடுங்க


இப்போ ஓபிஎஸ் பின்னாடி யாருமே இல்லைன்னு சொல்லிட்டு இருக்காரு.. அப்பறம் ஏன் நீதிமன்றம் போறீங்க? ஓபிஎஸ் பின்னாடி யாருமே இல்லைன்னு சொல்றீங்க இல்லை? அக்டோபர் மாதம் வரட்டும் நீங்களே பாருங்க.. மனசாட்சி உள்ள நிர்வாகிகள் இப்பவே இடம்பெயர தொடங்கிவிட்டனர்.. பொதுக்குழுவில் கலந்துக்கிட்டு கையெழுத்து போட்ட ஒரு ஒன்றிய செயலாளர், இப்போ வந்து, அண்ணே மன்னிச்சிடுங்கன்னு சொல்றார்.. இப்படி தினமும் எங்களிடம் வர்றாங்க.. அரசியலில் ஆதாயம் இல்லாமல் யாரும் இடம்பெற மாட்டார்கள்தான்..

 கீ + கஜானா

கீ + கஜானா

ஆனாலும், ஓபிஎஸ்பக்கம் நியாயம் இருக்கு, அவர் கரமும் ஓங்கட்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்.. எடப்பாடியை எதிர்த்து, நியாயம் கேட்டால், ஜனநாயகத்தை வலியுறுத்தினால், எங்களையே காயப்படுத்துவார்களா? எடப்பாடி செங்கோல் பிடித்ததில் இருந்து அவரது வரலாற்றை எடுத்து பாருங்க.. வார்டு செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகி, ஒரே தேர்தலில் வருவாய்த்துறை அமைச்சர், பொதுப்பணி துறை அமைச்சர், முதலமைச்சர் என்று வந்தவர் ஓபிஎஸ்.. வெறும் முதல்வர் பதவியை மட்டும் ஜெயலலிதா அவரை நம்பி அப்போது தரவில்லை.. பொருளாளர் பதவியில் கஜானா சாவியை, பெட்டகத்து சாவியை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.. எனவே, ஓபிஎஸ்ஸின் நாணயத்தை பற்றி விமர்சிப்பது சரியல்ல..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

நாங்கள் ஜாதி ரீதியாக செயல்படுவதாக வதந்திகளை பரப்பி கொண்டிருக்கிறாரே எடப்பாடி.. வேலுமணி, தங்கமணி என்று அத்தனை நிர்வகிகளுக்கும் பதவி தந்தது யார்? ஏன்?.. சசிகலா அன்று ஜாதி பார்த்திருந்தால், அன்னைக்கு பொறுப்பை ஓபிஎஸ், வைத்திலிங்கம் இப்படி யார்கிட்டயாவது தானே தந்திருக்க வேண்டும்? தினகரனிடம்கூட தரலையே.. எடப்பாடிக்கிட்டதானே நம்பி தந்தாங்க.. அப்போ ஜாதி தெரியலையா உங்களுக்கு? அதிமுகவில் எப்போதுமே சாதி பார்ப்பது இல்லை.. ஆனா, இன்னைக்கு கேபி முனுசாமியையும், சிவி சண்முகத்தையும் மோத விடறீங்களே, இதுதான் சாதி வன்மம்.. அது உங்ககிட்டதான் இருக்கு.. எங்ககிட்ட இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+