₹666 கோடியாமே.. எடப்பாடியை பார்த்ததும் அமித்ஷா விட்ட "டோஸ்".. காரணமே வேற போல.. பகீர் மருது அழகுராஜ்

எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றார் என்று மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு எதற்காக சென்றார் என்ற சீக்ரெட்டை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ்.

டெல்லி நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது ஒரு மாியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் அமித் ஷாவிடம் அரசியல் ஏதும் பேசவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த நிகழ்வு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

 666+ கோடி

666+ கோடி

அரசியல் எதுவும் பேசவில்லை என்றாலே, அரசியலை தவிர வேறு ஒன்றும் பேசியிருக்க மாட்டார் என்று அர்த்தம்.. எனக்கு தெரிந்து அவர் அழைப்பின்பேரில் புதுடெல்லிக்கு சென்றதாக தெரியவில்லை.. அச்சத்தின் காரணமாகவே சென்றதாக கருதுகிறேன்.. காரணம், நேற்றைய முதல்நாள்தான், பெங்களூரில் அங்கிருக்ககூடிய விசாரணைக்குழு லோக்ஆயுக்தா என்று சொல்லக்கூடிய ஊழல் தடுப்பு மன்றம், எடப்பாடியின் சம்பந்தி மகன் மீது 12 கோடி ரூபாய் லஞ்சப்புகார் உள்ளது.. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை கொண்டு போய், தந்துள்ளார்..

 சிக்கிக்கிட்ட ப்ரூப்

சிக்கிக்கிட்ட ப்ரூப்

இந்த விஷயத்தை போனிலேயே இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்ட ஆதாரங்களும் சிக்கி உள்ளன.. இதனடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. லோக் ஆயுக்தாவை பொறுத்தவரை, ஊழல் வழக்கு என்றால் பல வருடங்கள் சிறை செல்ல நேரிடும்.. அப்படித்தான் லோக்ஆயுக்தா வழக்கின் பின்னணியில்தான் எடியூரப்பாவும் சிறை சென்றார்.. முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்ககே அது காரணமாக இருந்தது.. பொதுவாக, லோக் ஆயுக்தா வழக்கானது விரைவில் முடிக்கப்பட்டுவிடும்.. விசாரணைகளிலும் ஒருவிதமான கடுமை இருக்கும்..

 4800+ கோடி

4800+ கோடி

அதனால்,இந்த வழக்கில் சம்பந்தி மகன் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா? அந்த பணம் எடப்பாடி உடையதாகவும் இருக்கலாம்.. ஏற்கனவே சம்பந்திக்கு நெடுஞ்சாலையில் 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு, இங்கே நம் மாநில அரசிடம் உள்ளது.. இந்த கலக்கத்தில் அவர் ஏற்கனவே உள்ளபோது, நேற்று பெங்களூரில் பதிவான வழக்கு, எடப்பாடிக்கு அச்சத்தை தந்திருக்ககூடியதாக இருக்கலாம்.. இன்னொரு பக்கம் கொடநாடு வழக்கு.. பல பகீர், திகில் சம்பவங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது.. உப்பை தின்னவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும்..

 கொன்று போட்ட நன்றி

கொன்று போட்ட நன்றி

காலில் விழுந்து பெற்ற முதல்வர் பதவியை, ஓபிஎஸ் தயவோடு நாலரை ஆண்டு காலம் நடத்திவிட்டு, ஆட்சி நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்த ஓபிஎஸ்ஸையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, கூவத்தூரில் சிறைக்கு செல்வதற்கு முன்பு எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சியை அமைத்துக் கொடுத்துவிட்டுப்போன, அந்த சசிகலாவுக்கே பரோல் தரக்கூடாது என்று கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் எழுதி, 'நன்றி'யை கொன்று போட்டவர் எடப்பாடி..

 டென்ஷன் அமித் ஷா

டென்ஷன் அமித் ஷா

அதனால் டெல்லி பயணமானது, முழுக்க முழுக்க நடுக்கத்தினால் ஆன பயணம் இது.. கோதாவரி காவேரி இணைப்பு பற்றியெல்லாம் அமித்ஷாவிடம் பேசியதாக சொல்கிறார்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இதை பேச வேண்டிய தேவை இல்லை.. மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசியிருக்க வேண்டிய விஷயம் இது.. அல்லது மத்திய பொதுப்பணித்துறை அமைச்சகத்திடம் பேசியிருக்க வேண்டும்.. ஆனால், இவர்கள் அமித்ஷாவை பார்த்து பேசிவிட்டு, வெளியே நின்று பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதே, அவர்களின் முகமே காட்டிக்கொடுக்கிறது..

 முனுசாமி

முனுசாமி

உள்ளே ஆலோசனை செய்தார்களா? கருத்துக்களால் தாக்கி அனுப்பினார்களா? என்று தெரியாத அளவுக்கு கலக்கமாக இருந்தார்கள்.. காரணம், வரும் தேர்தலில் நிறைய கணக்குகளை பாஜக மேலிடம் போட்டு வைத்துள்ளது.. ஒன்றுபட்ட அதிமுகவை பாஜக விரும்பும்போது, அந்த கணக்கை நொறுக்கி இடித்து தள்ளி கொண்டிருப்பவர் எடப்பாடியின் அரசியல்தான்.. அதனால்தான், எடப்பாடி மீது வெறுப்பு கோபத்தில்தான் சமீபகாலமாக இருந்ததாக நானும் கேள்விப்பட்டேன்.. அதிமுக எம்பி பதவியை நீக்க வேண்டும் என்று கடிதம் எழுதியும், அதை மேலிடம் கண்டுகொள்ளவேயில்லை. இன்றுவரை அதிமுகவின் எம்பி என்றே நிலைநாட்டப்பட்டு வருகிறார்..

 அமித் ஷா டோஸ்

அமித் ஷா டோஸ்

இடைக்கால பொதுச்செயலாளர் என்று வலிய சென்று ஒரு வாழ்த்து கடிதம் கேட்டார்.. இந்த விஷயம் எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால், அதையும் பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை.. அண்ணாமலை கூட வாழ்த்து சொல்லவேயில்லை.. "எதிர்க்கட்சி தலைவர்" என்றுதான் அண்ணாமலை இன்னமும் எடப்பாடியை பேசி வருகிறார். பாஜகவில் ஒருவர்கூட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை ரசிக்கவில்லை. விரும்பவும் இல்லை.. எடப்பாடியை வரவழைத்து அமித்ஷா திட்டியிருக்கலாம்.. அல்லது இவர்களாகவே சென்று திட்டு வாங்கியிருக்கலாம்.. எப்படி பார்த்தாலும் பேசிவிட்டு வந்ததுபோல தெரியவில்லை.. பேரிடி விழுந்தது போலவே தெரிகிறது..

பச்சோந்தி

பச்சோந்தி

இதே எடப்பாடி பழனிசாமி அன்று டெல்லிக்கு சென்றபோது, சசிகலா குறித்த கேள்விக்கு கடுமையாக பதிலளித்திருந்தார்.. இப்போது கேள்வி எழுப்பினால், பதில் எதுவும் சொல்லாமல் தவிர்க்கிறார்.. இதற்கு என்ன காரணம்? ஓபிஸ்ஸை பலமுறை தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார் எடப்பாடி.. டாக்குமெண்ட்டை திருட்டிட்டு போயிட்டார், பச்சோந்தி இப்படியெல்லாம் விமர்சிக்கிறார்.. ஆனால், ஓபிஎஸ் இதுவரை எடப்பாடியை ஒரே ஒரு வார்த்தைகூட தவறாக பேசியதில்லை.. வெள்ளி வாள் காணோம்னு சொன்னாங்க, சிபிசிஐடி உள்ளே சென்று பார்த்தால், வெள்ளி வாள் அங்கேயேதான் இருக்கிறது.. எப்படிப்பட்ட பொய்யர்கள் இவர்கள்.

துரைமுருகன்

துரைமுருகன்

அதிமுகவை இவர் பிளவுபடுத்தி கொண்டிருப்பதால், திமுகவுக்குள் பெரும் வாய்ப்பு சென்று கொண்டிருக்கிறது.. திமுக பின்னணில் ஓபிஎஸ் இருக்கிறார் என்கிறார்களே? அதற்கான அவசியம் என்ன வந்தது? அப்படி திமுகவை ஓபிஎஸ் புகழ்கிறார் என்றால், செங்கோட்டையன் அன்னைக்கு சட்டமன்றத்தில் என்ன சொன்னார்? "நான் பார்த்தவரையில், ஜனநாயகம் செழிக்கும் சட்டசபை இதுதான்" என்றாரே செங்கோட்டையன்? அப்படின்னா எம்ஜிஆர் காலத்தில் ஜனநாயக செழிக்கும் சட்டசபை நடக்கவில்லையா? துரைமுருகனை கேபி முனுசாமி பாராட்டவில்லையா?.. இதையெல்லாம் எப்படி பார்ப்பது? தன்னை காத்து கொள்வதற்கும், அடித்து குவித்துள்ள பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்கும், திமுகவுடன் வேண்டுமானால் திரைமறைவு முயற்சியை எடப்பாடி மேற்கொள்வார்.. அந்த அவசியம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லை.. திமுகவை புகழ்ந்து அவருக்கு என்னாக போகிறது?" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+