உயிர்பெற்று வரும் 48 ஆயிரம் வருட பழைய "உயிரினம்".. ஐஸுக்குள் இருந்து எழுந்து வரும் "ஸோம்பி".. ஷாக்
சென்னை: சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 46 ஆயிரம் ஆண்டுகள் பழைய வட்டப்புழுவை உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சியில் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்! உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

உலகம் முழுக்க காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். இதெல்லாம் எல்லோரும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் அபாயங்கள் என்றாலும், வேறு சில அபாயங்களும் உள்ளன.
அதுதான் வைரஸ்கள் வெளியேறுவது! அதாவது ஐஸ் கட்டிகளுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் வைரஸ்கள், இந்த ஐஸ் கட்டிகள் உருகுவதால் வெளியேறும் அபாயம் உள்ளது. நமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத, மருத்துவர்கள் இதற்கு முன் கேள்வி கூட படாத வைரஸ்கள் இதன் மூலம் தோன்றும் அபாயம் உள்ளதாக வைரலாஜி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
முக்கியமாக ரஷ்யாவில் ஐஸ் கட்டிகள் வேகமாக உருகுவது நடந்து வருகிறது. சைபீரியாவில் அதிகமாக இப்படி ஐஸ் பாறைகள் உருகி வருகின்றன.இங்கு உருகிய ஐஸ் பாறைகளில் இருந்து 13 புதிய வைரஸ்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த வைரஸ்கள் 48, 500 ஆண்டுகள் பழமையானது. இவை இத்தனை வருடங்களாக ஐஸ் பாறைகளுக்கு உள்ளே உறைந்த நிலையில் இருந்துள்ளது.
ஐஸ் பாறைகளுக்கு உள்ளே இருந்ததால் அவை சாகாமல் அப்படியே இருந்துள்ளன. இப்போதும் கூட அவர் பரவும் தன்மை கொண்டதாக இருந்துள்ளன. இந்த வைரஸ்களை ஸோம்பி வைரஸ்கள் என்று இதை ஆய்வு செய்த ஐரோப்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் சைபீரியாவில் ஐஸ் பாறைக்குள் கண்டுடிபிடிக்கப்பட்டு சாகாமல் இருந்த வட்டப்புழு ஒன்றை மொத்தமாக உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர். 2018ல் இந்த வட்டப்புழு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ரேடியோ கார்பன் சோதனையில் அது 46 ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவை 'dead awake' நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது சாகாமல், ஐஸ் கட்டிக்குள் இத்தனை ஆண்டுகளாக மயக்க நிலையில் இருந்துள்ளது. இதைத்தான் தற்போது இங்கு உயிர்ப்பிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள Max Planck Institute என்ற இடத்தில் இதை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வட்ட புழுவிற்கு Panagrolaimus kolymaensis என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் வெறும் 40 மீட்டர் ஆழத்தில் உருக தொடங்கிய ஐஸ் பாறையில் இருந்து இந்த வட்டப்புழு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் வட்டப்புழு ஒன்று அதிக வயதில் ரெக்கார்ட் செய்யப்பட்டு 39 வருடங்கள்தான் . அதன்பின் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வட்டப்புழுதான் 48 ஆயிரம் வருடங்கள் பழையது . இதை தற்போது உயிர்பித்து மேலே கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளை ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications