"உளறும்" ஹேம்நாத்.. 4வது நாளாக விசாரணை.. சித்ரா மாமனாரிடம் போலீஸ் கிடுக்கிபிடி.. வழக்கு பாய்கிறதா!
நடிகை சித்ரா மரண வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடக்கிறது
சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக டிவி சீரியலின் மொத்தம் 5 பேரை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தினர் போலீஸார்.. இதைதவிர, சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்திடம் 4வது நாளாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ராவின் மரணம் தற்கொலையே என்று முதல்கட்ட போஸ்ட் மார்ட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சித்ராவின் குடும்பத்தினர், நட்பு வட்டாரம் அதை ஏற்க மறுக்கிறது..
ஹேமந்திடம் 4வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.. ஹேம்நாத் முரண்பட்ட தகவலை அளிப்பதாக சொல்லப்படுகிறது.. அதனால்தான் நேற்று அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் நேரடியாகவே ஸ்டேஷனுக்கு வந்து அவரிடம் தனி ரூமில் தீவிரமான விசாரணையை நடத்தி உள்ளார்.

வழக்கு
அதனாலேயே ஆர்டிஓ விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்த வழக்கில் அதிக அளவு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் வழக்கு விசாரணையில், தெளிவு கிடைக்கும் பட்சத்தில் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது... இவை எல்லாமே ஆர்டிஓ விசாரணை தொடங்கப்பட்டு, அது முழுமை அடைந்த பின்னரே இறுதி செய்யப்படும் என்கின்றது போலீஸ் தரப்பு.

விசாரணை
அந்த வகையில்தான் இன்று 4-வது நாளாக ஹேமந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.. மற்றொரு புறம், சித்ரா கடைசியாக கலந்து கொண்ட சீரியல் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடந்துள்ளது.. குறிப்பாக அந்த சீரியலின் டைரக்டர் சிவசேகர், நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.

சீரியல்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ரா எப்படி இருந்தார்? என்ன மன நிலையுடன் இருந்தார்? என்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.. அதற்கு அவர்கள், சித்ரா வழக்கம்போலவே தான் இருந்தார் என்றும், ஒரு வித்தியாசமும் தங்களுக்கு தெரியவில்லை, இயல்புடன்தான் காணப்பட்டார் என்று பதிலளித்துள்ளனர். இந்த 5 பேரும்தான், கடைசியாக நடித்த சீனில் ஒன்றாக இருந்துள்ளனர்.. அதனாலேயே இவர்களிடம் விசாரணை நடந்துள்ளது.

வாக்குமூலம்
இதற்கு அடுத்தபடியாக, நடிகர்கள் வெங்கட், ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன், விக்ரம் ஆகியோரிடம் இன்று விசாரணையை போலீசார் நடத்த உள்ளனர்.. இதைதவிர, ஹேம்நாத்தின் அப்பாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவரிடம் வாக்குமூலம் பெறும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
