தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

தமிழகம் முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு தினசரி பாதிப்பு 5,500-ஐ கடந்து செல்கிறது.

6,000-ஐ நெருங்கிய பாதிப்பு
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்கியுள்ளது.

5,989 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,26,816 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,886 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,952 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,76,257 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,673 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 83,895 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,01,01,836 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக பாதிப்பு
சென்னை, கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று 1977 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, பாதிப்பு 2,000-ஐ நெருங்கியது. செங்கல்பட்டில் 615 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 501 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 181 பேருக்கும், மதுரையில் 194 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications