5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : திருத்தப்பட்ட மாற்றம் ஏன்?
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்தமுறை 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் இருந்த குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த முறை மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் மாறாத 4 ஐபிஎஸ் அதிகாரிகளும்
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் , கோவை ஆணையர் மாற்றத்துடன் சேர்த்து 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நவ18 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் நெல்லை எஸ்.பி. டிஜிபி அலுவலக ஏஐஜி, புளியந்தோப்பு துணை ஆணையர், வேலூர் எஸ்.பி ஆகிய நால்வரும் மாற்றப்பட்டனர். இவர்கள் நால்வரும் எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள்.

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : திருத்தப்பட்ட மாற்றம் ஏன்? தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த முறை மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த முறை மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பம் சரி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும் மாறாத 4 ஐபிஎஸ் அதிகாரிகளும்
கடந்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மத்திய அரசின் அயல்பணிக்குச் சென்றதால் அப்பதவிக்கு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் நியமிக்கப்பட்டார். கோவை ஆணையர் மாற்றப்பட்டார் அவர்களுடன் சேர்த்து 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நவ18 ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் நெல்லை எஸ்.பி. டிஜிபி அலுவலக ஏஐஜி, புளியந்தோப்பு துணை ஆணையர், வேலூர் எஸ்.பி ஆகிய நால்வரும் மாற்றப்பட்டனர். இவர்கள் எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள்.

இடமாற்றம் இல்லை, பதிலும் இல்லை குழப்பத்தில் போலீஸார்
இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை உள்துறைச் செயலர் பிறப்பித்து 10 நாட்கள் கடந்த நிலையில் மேற்கண்ட 4 எஸ்பிக்கள் அவர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பொறுப்பேற்கவில்லை. இதனால் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். காவல் பணியும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த இடமாற்றத்தில் நெல்லை எஸ்.பி ரிலீவ் ஆகாமல் இருந்ததாக கூறப்பட்டது. இதில் அவரை ரிலீவ் ஆகாமல் தடுத்த அதிகாரமிக்க கை எது அதனால் தொடர்ச்சியாக மற்றவர்களும் ரிலீவ் ஆகாமல் போன குழப்பம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இடமாற்றம் வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நெல்லை எஸ்.பி சட்டம் ஒழுங்கு இல்லாத காவலர் பயிற்சிக்கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். புளியந்தோப்பு துணை ஆணையர் மாற்றம் நீக்கப்பட்டு அங்கு மதுரை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
ஒரு எஸ்,பி ரிலீவ் ஆனால் தான் அடுத்தவர் அவர் இடத்திற்கு போக முடியும் அவர் ரிலீவ் ஆகாததால் ஒவ்வொருவரும் இடமாற்றம் செய்ய முடியாமல் சங்கிலி தொடர்போல் நிற்கிறது என்கிறன தகவல் வெளியானது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பொறுப்பேற்பதில் சிரமம் உள்ள அதிகாரிகள் முதலில் பொறுப்பேற்றுவிட்டு பின்னர் உயர் அதிகாரிகளிடம் தங்கள் சிரமத்தை முறையிட்டு பின்னர் இடமாற்றத்தை ரத்து செய்வார்கள்.
ஆனால் இந்த இடமாற்றத்தில் நெல்லை எஸ்.பி ரிலீவ் ஆகாமல் இருந்ததாக கூறப்பட்டது. இதில் அவரை ரிலீவ் ஆகாமல் தடுத்த அதிகாரமிக்க கை எது அதனால் தொடர்ச்சியாக மற்றவர்களும் ரிலீவ் ஆகாமல் போன குழப்பம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இடமாற்றம் வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நெல்லை எஸ்.பி சட்டம் ஒழுங்கு இல்லாத காவலர் பயிற்சிக்கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். புளியந்தோப்பு துணை ஆணையர் மாற்றம் நீக்கப்பட்டு அங்கு மதுரை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இடத்துக்கு நெல்லை நகர் காவல் எஸ்.பியாக யாரும் நியமிக்கப்படவில்லை. முந்தைய உத்தரவில் சென்னை ஏஐஜி சரவணன் அங்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது நடைமுறைக்கு வருமா என்பது தெரியவில்லை. தற்போது தமிழக அரசு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறைச் செயலர் இடமாற்றம் குறித்து வெளியிட்ட உத்தரவு வருமாறு மாற்றப்பட்ட அதிகாரிகளும் முன்னர் வகித்த பதவியும்.
1. மதுரை போக்குவரத்து துணை ஆணையராக பதவி வகிக்கும் ஈஸ்வரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர்/எஸ்.பி ஆறுமுகசாமி மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. நெல்லை எஸ்.பியாக பதவி வகிக்கும் மணிவண்ணன் சென்னை காவல் பயிற்சி கல்லூரி எஸ்.பி/முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை எஸ்.பி சிஐடி எஸ்.பி அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. செங்கல்பட்டு எஸ்.பி விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மேற்கண்ட மாற்றம் உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications