நாடு முழுக்க உள்ள தனியார், அரசு ஊழியர்களுக்கு.. போன முக்கிய செய்தி.. மாறப்போகும் 5 முக்கிய ரூல்ஸ்!
சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான 5 முக்கியமான விதிகள் மாற்றப்பட உள்ளன. 5 விதிகள் மற்றும் காலக்கேடுகள் மொத்தமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்புகளை பார்க்கலாம்.
அறிவிப்பு 1:
UAN ஆக்டிவேஷன் செய்ய மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு முந்தைய காலக்கெடு டிசம்பர் 15 ஆகும். வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது இந்த காலக்கெடுவை ஜனவரி 15, 2024 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன், நவம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக EPFO சேவைகளை ஆன்லைனில் பெறுவதற்கு உலகளாவிய கணக்கு எண் (UAN) உள்ளது. இதை பயன்படுத்துவதற்கு முன் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். UAN என்பது 12 இலக்க எண் ஆகும், இது EPFO மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதை ஆக்டிவேட் செய்ய ஜனவரி 15ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு 2:
இனி EPFOவில் உள்ள பி.எஃப் பணத்தை எளிதாக ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். தற்போது உள்ள கடினமான முறையை பயன்படுத்த வேண்டியது இல்லை. இதற்கு பதிலாக எளிதாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்.
PAN 2.0 அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு இப்போது EPFO 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது பிஎப் பணம் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது மாற்றப்பட உள்ளது. அதன்படி சந்தாதாரர்கள் நேரடியாக ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் தொகையை பெறும் வகையில் திட்டத்தை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏஎம்கள் மூலம் பிஎஃப் எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி மே-ஜூன் 2025க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது EPFO சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும். அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
அறிவிப்பு 3:
அதோடு EPFO உடன் இணைக்கப்பட்டு உள்ள வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும், இதனால் EPFO மூலம் பணம் வழங்கப்படும் போதெல்லாம், அதனுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் பரிமாற்றப்படும். இதற்கான காலக்கெடுவை ஜனவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
அதோடு மத்திய அரசு சுற்றறிக்கையின்படி குறிப்பிட்ட சிலர் பிஃஎப் தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு மூலம் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச தொழிலாளர்கள்(IW), தங்கள் பணிகளை முடித்துவிட்டு ஆதார் பெறாமல் இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள். நிரந்தரமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்த மற்றும் ஆதார் இல்லாமல் குடியுரிமை பெற்ற இந்திய தொழிலாளர்கள் நேபாள குடிமக்கள் மற்றும் பூட்டானின் குடிமக்கள் பணியாளர் வரையறைக்குள் வருபவர்கள் மற்றும் EPF & MP சட்டத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவில் வசிக்காதவர்கள் மற்றும் அதன் விளைவாக ஆதார் இல்லாதவர்கள்.
அறிவிப்பு 4:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்புகளில் தற்போது 12 சதவீத வரம்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரம்பு தற்போது நீக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமாக சேமிப்பு பழக்கங்கள் இருக்கும். அந்த பழக்கங்களை அடிப்படையாக வைத்து வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது வருங்கால வைப்பு நிதிக்கு (PF) பணியாளர் பங்களிப்பு உயர்திக்கொள்ளலாம். தற்போது 1800 ரூபாய் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். அதாவது பிஎப் தொகைக்கு நீங்கள் கூடுதலாக பணம் கட்டலாம்.
அறிவிப்பு 5:
உங்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் வேண்டும் என்றால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும். விண்ணப்பித்தவர்களுக்கு பி.எப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 நாளில் பணம் எடுக்கும் வசதியை ஜனவரி 2025 முதல் கொண்டு வர உள்ளனர்.
கல்வி, திருமணம், வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி.எப்., தொகையிலிருந்து அட்வான்ஸ் பெற முடியும. இதற்கான முறை தானியங்கி நடைமுறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விண்ணப்பித்த 3 நாளில் பி.எப்., பணம் கிடைக்கும் .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications