Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடனை தீர்க்கும் ₹5 அதிசயம்! செவ்வாய்க்கிழமை இதைச் செய்தால் ஓடோடி வரும் செல்வம்.. இதோ அந்த பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம்பாதித்த பணம் கையில் தங்காமல் கடனாகவே ஓடிக்கொண்டிருக்கிறதா.. வட்டி மேல் வட்டி ஏறி வாழ்க்கையே சிக்கலில் சிக்கியதுபோல் தோன்றுகிறதா.. எத்தனை முயன்றாலும் கடன் சுமை குறையாமல் மனம் தளர்ந்துவிட்டதா.. அதற்கான ஒரு எளிய ஆன்மீக வழி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா..?
வெறும் 5 ரூபாயில் தொடங்கும் இந்த செவ்வாய் ரகசியம் உங்கள் நிலையை மாற்றுமா..? இதை பற்றி இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

debt relief Tuesday remedy spiritual wealth money attraction charity ritual

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாகத் தூங்குவதற்குப் பெரிய தடையாக இருப்பது அவன் வாங்கிய கடனாகத்தான் இருக்கிறது. அவசரத் தேவைக்காகவோ அல்லது தொழில் முன்னேற்றத்திற்காகவோ வாங்கிய கடன், வட்டி மேல் வட்டி ஏறி ஒரு கட்டத்தில் கழுத்தை நெரிக்கும் நிலைக்குப் பலரையும் தள்ளிவிடுகிறது.


கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதா

எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தப் பணம் எங்கே போகிறது என்றே தெரியாமல், கையில் ஒரு பைசா கூடத் தங்காமல் கடனுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று வருந்துபவர்கள் நம்மில் ஏராளம்.

இத்தகைய பொருளாதார சிக்கல்களிலிருந்து விடுபட உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குத் தெய்வீக அருளும், சில எளிய வாஸ்து மாற்றங்களும் நமக்கு தேவைப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் காட்டிய வழியில், மிகக்குறைந்த செலவில் அதாவது வெறும் 5 ரூபாய் செலவில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான பரிகாரத்தைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

செவ்வாய் மாலை பரிகாரம்

ஆன்மீக ரீதியாக செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்கும், முருகப் பெருமானுக்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஜாதக ரீதியாக செவ்வாய் பகவானை "ருண காரகன்" என்று அழைப்பார்கள். அதாவது கடன்களை உருவாக்குவதும் அவரே, அந்தக் கடன்களிலிருந்து நம்மை விடுவிப்பதும் அவரே. அதேபோல செவ்வாய்க்கிழமைக்கு "மங்கள வாரம்" என்றொரு பெயரும் உண்டு.

மங்கலமான காரியங்கள் தடையின்றி நடக்கவும், தீராத கடன்கள் தீரவும் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் இரட்டிப்பு பலனை தரும். பொதுவாகக் கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. ஆனால், அன்று பழைய கடனில் ஒரு சிறு பகுதியைத் திருப்பிச் செலுத்தினால், அந்தக் கடன் மிக வேகமாக அடைபடும் என்பது ஐதீகம்.


5 ரூபாய் பொருள் -, தானம் செய்தால் அதிசயம்

சரி, அந்த 5 ரூபாய் பரிகாரம் என்ன? செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தைச் சுக்கிர ஹோரை அல்லது செவ்வாய் ஹோரை என்று கணக்கிடுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருக்கும் மளிகைக் கடைக்குச் சென்று உங்கள் கையால் 5 ரூபாய் மதிப்பிலான "கல் உப்பு" அல்லது "மஞ்சள்" வாங்கிக் கொள்ளுங்கள்.

கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. அதேபோல மஞ்சள் என்பது மங்கலத்தின் அடையாளம். இந்த 5 ரூபாய் மதிப்பிலான உப்பை அல்லது மஞ்சளை வாங்கி வந்து, அதனை அருகில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கோ அல்லது கோவிலில் இருப்பவர்களுக்கோ தானமாக வழங்க வேண்டும். "என்னிடம் இருக்கும் கடன் சுமை நீங்கி, என் வாழ்வில் சுபிட்சம் உண்டாக வேண்டும்" என்று மனதார வேண்டிக்கொண்டு இதனை செய்ய வேண்டும்.

நெகட்டிவ் எனர்ஜி

இந்த எளிய தானம் எதற்காக செய்யப்படுகிறது என்றால், ஒருவருக்குத் தானம் கொடுக்கும்போது நம்மிடம் இருக்கும் Negative Energy எனப்படும் எதிர்மறை ஆற்றல் குறைந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது.

குறிப்பாக செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் இதனைச் செய்யும்போது, செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து கடன் அடைப்பதற்கான புதிய வருமான வழிகள் பிறக்கும். பல வீடுகளில் பணப்புழக்கம் இல்லாமல் வறுமை தாண்டவமாடுவதற்கு அங்கே இருக்கும் வாஸ்து குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பாதிப்புகளை நீக்கி, செல்வத்தை ஈர்க்கும் காந்தமாக உங்கள் வீட்டை மாற்றுவதற்கு இத்தகைய சிறு பரிகாரங்கள் பெரிதும் உதவும்.

இந்த செய்தியை படிக்கும்போது, "வெறும் 5 ரூபாயில் கடன் தீர்ந்துவிடுமா?" என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். ஆனால், ஆன்மீகம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. உங்கள் உழைப்போடு சேர்ந்து, நம்பிக்கையுடனும் முறையான திட்டமிடலுடனும் இந்த எளிய வழிபாட்டைத் தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் செய்து பாருங்கள்.

உங்கள் கையில் பணம் புழங்குவதையும், கடன்கள் சிறிது சிறிதாகக் குறைவதையும் நீங்களே உணர்வீர்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. கடன் இல்லாத வாழ்வே நிம்மதியான வாழ்வு என்பதை உணர்ந்து, இந்தச் சிறிய முயற்சியைத் தொடங்குங்கள்; உங்கள் வாழ்விலும் அதிசயம் நடக்குமாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+