எடப்பாடியின் 5 ஸ்டார் ஹோட்டல் ரகசியம்.. திமுக ஆர்.எஸ்.பாரதி சொல்றதை பாருங்க.. பல கோடி செலவாம்
சென்னை: பொதுக்குழு உறுப்பினர்களை தங்க வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள அனைத்து அறைகளையும் வாடகைக்கு எடுத்தார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

பொதுச்செயலாளர் இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

எடப்பாடி பழனிசாமி புகார்
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று சாடிய அவர், அதிமுக தலைமையகத்தை கைப்பற்றியதை கண்டித்தார். ஆளும் திமுக அரசு ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து செயல்படுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழுவை கூட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். காலத்தில் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்களா? கடந்த 2,3 நாட்களாக சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டலில் இடம் கிடைக்கவில்லை.

திமுக தலையிடவில்லை
திமுகவுக்கும் அவர்களின் பொதுக்குழுவுக்கும் என்ன தொடர்பு? நீதிமன்றத்துக்கு அவர்கள்தான் சென்றனர். இரட்டைப் புறா, சேவல் பிரச்சனை வந்தபோதும் அவர்களாகவே நீதிமன்றம் சென்றார்கள். அதில் திமுகவா தலையிட்டது? எம்.ஜி.ஆர். மறைந்ததிலிருந்தே அக்கட்சியில் ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டிருக்கிறது. பின்னர் தங்களுக்குள் சேர்ந்துகொள்கிறார்கள்." என்றார்.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications