லோக்சபா தேர்தலில் மோடியை எதிர்கொள்ள காங். ரெடி.. ராகுல் காந்தி விஸ்வரூபம் சாத்தியமானது எப்படி?
Recommended Video

சென்னை: அகில இந்தியாவிலும் மோடியை எதிர்ப்பதற்கு ஆளே கிடையாது என்ற பேச்சு, 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலமாக பொய்யாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தயாராகவில்லை என்று பெருவாரியான அரசியல் விமர்சகர்கள் விமர்சனங்களின் வைத்து வந்தனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பிரமாண்டக் கூட்டணி ஏற்படுத்தி, சந்திரபாபு நாயுடு அல்லது மம்தா பானர்ஜியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதுதான், மோடியை வீழ்த்துவதற்கு ஓரளவுக்கு பயன் தரும் என்று விமர்சகர்கள் கூறினார்கள்.

முழு தயார்
ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடியை எதிர்கொள்வதற்கு ராகுல்காந்தி முழு அளவில் தயாராகி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளின் ராஜமாதா என்று வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி, காங்கிரஸ் தலைமையை ஏற்க ராகுல் காந்தியைதான் அழைத்தார். அவரது கணிப்பு பொய்யாக போகாது என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பினார்கள். அது தற்போது உறுதியாகிவிட்டது.

விடை
மோடியை எதிர்கொள்ள பிரியங்கா காந்தியை அழைப்போமா அல்லது வேறு கட்சி தலைவர்களின் முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை சந்திப்போமா என்ற குழப்பத்தில் இருந்து சில காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும், அந்த கட்சி தொண்டர்களுக்கும் ராகுல்காந்தி தக்க விடை அளித்து விட்டார். தனது எளிமையான தேர்தல் பிரச்சாரத்தின் மூலமாகவும், சமூக வலைத்தள பிரச்சாரங்கள் மூலமாகவும், பாஜகவின் இந்துத்துவாவை, தனது கோயில் பயணங்கள் மூலமாக ஈடுகட்டியும், பெருவாரியான மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலையை உருவாக்குவதில் ராகுல்காந்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

கடும் போட்டி
அசைக்க முடியாத ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி, சட்டீஸ்கரில் தொடர்ந்து மூன்றாவது மூன்று முறை ஆட்சியை பிடித்த ராமன் சிங் ஆட்சி போன்றவற்றை பற்றி கவலைப்படாமல், பாஜக கண்ணில் விரலைவிட்டு ஆட்டி காங்கிரஸ் வசம் அந்த மாநிலங்களை ஏறத்தாழ கொண்டுவந்துள்ளார் ராகுல் காந்தி. அதில் ம.பியில் மட்டும் கடும் போட்டி நிலவுகிறது. மோடிக்கு ஈடாக அதிரடி காட்டக்கூடிய வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக வை குப்புறத் தள்ளிவிட்டு ராஜஸ்தானையும், கைப்பற்றியுள்ளார் ராகுல் காந்தி.

தென் மாநிலங்கள்
வட மாநிலங்களிலே, இந்த நிலை எனும் போது தென் மாநிலங்களை பற்றி கேட்கவா வேண்டும்? ஏற்கனவே பாஜகவுக்கு எதிரான அலை தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வீசி வரும் நிலையில் தெலுங்கானாவும் என்று அதைப் பிரதிபலித்து விட்டது. எனவே வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி தலைமையில் தேர்தலை சந்திக்கப் போகும் பாஜகவிற்கு, ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாகத் திகழப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications