50 எம்எல்ஏ + 30 மா.செ + 2 எம்பி. "லிங்க்"கில் உள்ளனர்.. எடப்பாடி வீசிய பந்தை திருப்பயடித்த அறிவாலயம்
அதிமுகவில் 50 எம்எல்ஏ-க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஆர்எஸ் பாரதி சொல்கிறார்
சென்னை: அதிமுகவில் உள்ள 50 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நடந்து கொண்டிருக்கிறது.. சட்டரீதியான விஷயங்கள் நடந்துவந்தாலும், தொண்டர்கள் யார் பக்கம் போவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், திருவள்ளூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, திமுகவை சீண்டினார்.

10 MLAs
"அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக பேசப்படுகிறது என்று செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பழனிசாமி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.. எடப்பாடி இப்படி சொன்னது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ள தகவல் அரசியலில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. யார் அந்த் 10 பேர்? அந்த எம்எல்ஏக்கள் லிஸ்ட்டை எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா? என்ற கேள்வியை சோஷியல் மீடியாவிலும் எழுப்பி வருகின்றனர்.

50 MLAs
இதனிடையே, திமுக எம்எல்ஏ-க்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருவதாக எடப்பாடி கூறிய கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பதிலளித்துள்ளார்... சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ் பாரதி, "அதிமுக-வில் உள்ள அனைவரும் திமுக-வில் இணைந்து பயணிக்க வேண்டும்.. அதிமுகவில் உள்ள 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 30 மாவட்டச் செயலாளர்கள், 2 எம்பி-க்கள் திமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி 10 பேர் கொண்ட அந்த பட்டியலை வெளியிட்டால், தானும் பட்டியலை வெளியிடுவேன்.. அதிமுகவில் இருந்து பல பேர் திமுகவிற்கு வந்துவிட்டனர்..

சிக்ஸர்
எடப்பாடி வீசிய அதே பந்தை அந்த பக்கம் சிக்ஸர் அடித்து திருப்பி விட்டுள்ளார் ஆர்எஸ் பாரதி.. இருந்தாலும் இவர்கள் 2 பேரும் பேசுவது உண்மையா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சீண்டி கொண்டே இருந்தார்.. ஊழல் லிஸ்ட்களை வெளியிடுவோம் என்று பகிரங்கமாக சொல்லி வந்த நிலையில், திடீரென தருமபுரி எம்பி செந்தில்குமார், 2 பாஜக எம்எல்ஏக்களை தூக்குவோம் என்று பதிவிட்டிருந்தார்.

30 மாவட்ட செயலாளர்கள்
அதனால்தான் அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.. திமுகதான் திராவிட இயக்கம் என்று விளக்கமளித்தார்.. இதையடுத்து, உதயநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதிலளித்த ஆர்எஸ் பாரதி, "எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவையே காட்டிக்கொடுக்கிறார். எந்தவித பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சட்டமன்றத்தில் உட்கார வைத்தார் ஜெயலலிதா.. அரசு நிகழ்ச்சிகளிலும் உட்கார வைத்தார். எடப்பாடி பழனிசாமியே சசிகலா காலில் விழுந்தவர்தானே? என்று திருப்பி கேட்டார் ஆர்எஸ் பாரதி.

எம்எல்ஏக்கள்
ஓபிஎஸ் விவகாரம் தலையெடுத்ததில் இருந்தே, மொத்த கோபமும் எடப்பாடிக்கு திமுக மீது திரும்பி உள்ளதாக தெரிகிறது.. அதற்கேற்றவாறு, முதல்வர் ஸ்டாலினும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கையை பற்றி அடிக்கடி சொல்லி எடப்பாடி தரப்பை கலங்கடித்து கொண்டே இருக்கிறார்.. எனவே, இரு தரப்புமே தங்கள் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எடப்பாடி சொன்ன அந்த 10 எம்எல்ஏக்கள் யார்? ஆர்எஸ் பாரதி சொன்ன 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 30 மாவட்டச் செயலாளர்கள், 2 எம்பி-க்கள் யார்? லிஸ்ட் வெளிவருமா? பார்ப்போம்..!
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications