"அம்மா".. பார்த்து பார்த்து கவனிச்சாரே ஜெயலலிதா.. புதுசா கிளம்பிய சிக்கல்.. களமிறங்கிய திமுக.. சபாஷ்

நடைபாதை கடைகளுக்கு அம்மா உணவக உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.

சுட சுட இட்லி, கெட்டியான சாம்பார், அருமையான குடிநீர், குறைவான விலை என அனைத்து தரப்பு மக்களையும் திரும்பி பார்க்க வைத்த திட்டம் "அம்மா உணவகம்"

'ஏழைகளின் பசி தீர்க்கும் மிகச் சிறந்த திட்டம்' என்ற முழக்கத்துடன் உள்ளே நுழைந்தது அம்மா உணவகம் திட்டம். அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கவே இந்த மகத்தான திட்டம் என்று சொல்லியே ஜெயலலிதா சென்னையில் துவக்கி வைத்தார்.

 அருமருந்து

அருமருந்து

முதல் தினமே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு அதிர்வையே ஏற்படுத்தியது. எத்தனையோ கூலி தொழிலாளர்கள் ஒருவேளை மற்றும் அரைவயிறு சாப்பாட்டுடன் காலம் தள்ளிய கூலி தொழிலாளர்களுக்கு அருமருந்தாக அமைந்தது அம்மா உணவகம்.. ஆனாலும், அம்மா உணவகம் சரியாக செயல்படுவதில்லை என்றும், திமுக அரசு வந்ததுமே, அம்மா உணவகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்திகள் வெளிவந்தம் இருந்தன.. திமுக அரசு இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தபடியே உள்ளது..

உணவகம்

உணவகம்

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேஎன் நேரு, "தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளதாகவும், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்றும், தேவைக்கு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இருப்பதால் அவர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.. எனினும், சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் நாளுக்கு நாள் விற்பனை சரிந்து வருகிறதாம்.

 100, 500

100, 500

அதனை மேம்படுத்த தேவையான நிதி இல்லாததால் வியாபாரம் குறைகிறது. 3 வேளையும் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்படுவதால் வருடத்துக்கு ரூ.140 கோடி மாநகராட்சிக்கு செலவாகிறது. இதனால், அம்மா உணவகங்கள் மூலம் ரூ.20 கோடி மட்டுமே வருமானம் வருகிறது... எனவே, பெரும்பாலான அம்மா உணவகங்களில் கோதுமை மாவு வழங்கப்படாததால் இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகிறதாம்.. சமீபத்திய ஆய்வின்படி 50 அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான வருவாயை ஈட்டி வருகின்றன. அங்கு தினமும் ரூ.100, ரூ.150-க்கு மொத்தமே விற்பனை ஆவதால், மிக குறைந்த அளவில் மக்கள் அங்கு வருவதால் விற்பனை சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

 ஊழியர்கள்

ஊழியர்கள்

இந்த நிலையில், அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மொத்தமாக நடைபாதை கடைகளுக்கு விற்பனை செய்வதாக புதுப்புகார் எழுந்தது.. பொதுமக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற புகாரும் சேர்ந்து கிளம்பவும், அம்மா உணவகத்தில் யார்? யார்? சாப்பிடுகிறார்கள் என்ற விவரங்கள் தேவை என்று ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், அம்மா உணவகங்களில் சாப்பிட வருவோரிடம் 21 கேள்விகள் கேட்டு அதனை பதிவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 லிஸ்ட் ரெ லிஸ்ட் ரெடிடி

லிஸ்ட் ரெ லிஸ்ட் ரெடிடி

அதன்படி, கட்டுமான தொழிலாளர்களா? அரசு, தனியார் நிறுவன ஊழியர்களா? 60 வயதுக்கு மேற்பட்டவரா? சொந்த வீட்டில் வசிப்பவரா? அல்லது வாடகை வீட்டில் வசிப்பவரா? எத்தனை வேளை சாப்பிடுகிறார்? என்ன காரணத்திற்காக அங்கு சாப்பிடுகிறார்? தமிழகத்தை சேர்ந்தவரா? பிற மாநிலத்தவரா? என்ன வேலை செய்கிறார்? என்பது போன்ற விவரங்களை சேகரித்து அனுப்ப தொடங்கி உள்ளனராம்.. அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல, கட்டுமான தொழிலாளர்கள் சாப்பிட்டால் அதற்கான தொகையை கட்டுமான வாரியத்திடம் வசூலிக்கலாம் என்றும் பரிசீலித்து வருகிறதாம் தமிழக அரசு..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+