எஸ்இடிசி பஸ்களில் சூப்பர் சலுகை.. இவ்வளவு மிச்சமா.. குஷியில் குவியும் மக்கள் கூட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தொடர் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 300 கி.மீ.-க்கு மேற்பட்ட நீண்ட தொலைவு பயணத்துக்காக 251 வழித்தடங்களில், இருக்கை, படுக்கை, குளிா்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட 1,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக போக்குவரத்துத் துறை பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகையாக அடுத்த தொடா் பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படியே 6 முறை பயணம் செய்யும் போது 50 சதவீத கட்டண சலுகை தானாகவே கிடைக்கும் வகையில்இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை திட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும் போது, "ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் ஆன்லைனில் எஸ்இடிசி தளத்தில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
இதேபோல் 30 நாட்களுக்குள் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு, அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 10 சதவீத கட்டணச் சலுகையும், கடந்த மே 1-ம் தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகையும் அமலில் இருக்கிறது.
தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை (ஜூன் 22) 487 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்திருக்கிறார்கள். இதேபோல் 10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,351 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாகப் பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்குப் பொருந்தாது என்று எஸ்இடிசி அறிவித்துள்ளது. எனினும் இந்த திட்டம் காரணமாக சாதாரண நாட்களில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பயணிகளை ஈர்க்க நவீன வசதிகளுடன் பேருந்துகளை இயக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications