100 நாள் வேலைத் திட்டத்தில் 50 சதவீதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முதல்முறையாக நேற்றைய தினம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டானது காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தியாவில் 3ஆவது மாநிலமாக தமிழகம் இந்த பட்ஜெட்டை தனியே தாக்கல் செய்கிறது. இதில் இடம்பெற வேண்டிய சிறப்பம்சங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ரசாயன உரங்களை தடை செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் 50 சதவீதத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக வேளாண் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். நீர் மேலாண்மையை அதிகப்படுத்தும் வகையில் ஏரி குளங்களை சீரமைக்க வேண்டும். தடுப்பணைகளை அதிக அளவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications