வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! குஷன் பெர்த்துகளுடன் 50 ஸ்லீப்பர் ரயில்கள் ரெடியாக போகுது
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் ஆலைக்கு முதலில் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஐசிஎஃப்பிலிருந்துதான் 60 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

சாதாரண அம்ரித் வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன. இது தவிர குறுகிய தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையிலஸ் முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் தயாரித்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்லீப்பர் பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் மெட்ரோ ரயில்களை ஐசிஎஃப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப்பில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலை இயக்கி சோதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஆணையை ரயில்வே வாரியம் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் 16 அல்லது 24 பெட்டிகள் இருக்கும். தற்போது இந்த ரயிலுக்கான வடிவமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 2025- 2026 ஆம் நிதியாண்டில் இந்த ரயில் தயாரிக்கப்படும். தற்போது வெறும் 10 ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் பெங்களூரில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
வந்தே பாரத் ரயில்களானது இந்தியாவில் முழுக்க முழுக்க தயாரிக்கப்படுகிறது. இதன் சிறப்பே என்ஜினுக்கு என தனிப்பெட்டி இல்லாததுதான். இந்த ரயில்கள் தமிழகத்தில் சென்னையை அடுத்த பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் தொடங்கப்படுகிறது. இந்த ரயிலில் பாதுகாப்பு, வேகம், சொகுசான பயணம் இருப்பதால் மக்கள் இதை விரும்புகிறார்கள். இந்த ரயில்கள் 2018 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனால் இதை train 18 என அழைக்கிறார்கள்.
ஸ்லீப்பர் கோச் குறித்த புகைப்படங்கள் கடந்த சில மாதத்திற்கு முன்பு வெளியானது. அதில் பார்ப்பதற்கு நட்சத்திர ஹோட்டல் போல் 3 பெர்த்கள் உள்ளன. ஒவ்வொரு பெர்த்துக்கும் நன்கு கேப் இருக்கிறது. படுக்கைகள் குஷன் வைக்கப்பட்டுள்ளன. எனவே ரயிலில் படுத்துக் கொண்டு போனால் ஏசியில் நிம்மதியான தூக்கம் கேரண்டி!












Click it and Unblock the Notifications