சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசர அவசரமாக.. ஓபிஎஸ் வீட்டுக்கு ஓடிய "தலைகள்".. பட்டென எடுத்த முடிவு.. 500 பேராமே.. பிளானே இதுதான்

500 ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் சஸ்பென்ஸாக உள்ள நிலையில், ஓபிஎஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தன்னை தயார் செய்து வருகிறார்.. இதையடுத்து அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.

Recommended Video

    OPS வசமான அதிமுக

    அதிமுக யார் கையில் போக போகிறது? நடந்து முடிந்த பொதுக்குழு செல்லுபடியாகுமா? தீர்மானங்கள் ரத்தாகிவிடுமா? அல்லது தன்னுடைய ஆளுமையை இன்னொருமுறை எடப்பாடி பழனிசாமியே நிரூபித்து விடுவாரா? என்ற கேள்விகள் எல்லாம் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

    90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதாகவே சொன்னாலும்கூட, பொதுக்குழு நடத்த எடப்பாடிக்கு நீதிமன்றமே உத்தரவு தந்தாலும்கூட, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடமே ஒப்படைத்தாலும்கூட, ஓபிஎஸ் சளைக்கவில்லை.

    எல்லாமே தவறு! ஓபிஎஸ் கையில் 7 எல்லாமே தவறு! ஓபிஎஸ் கையில் 7

     மாறி மாறி கேஸ்

    மாறி மாறி கேஸ்

    சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார்.. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என மாறி மாறி கோர்ட் படியேறினார். சில கண்டனங்களையும் நீதிபதிகளிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார். தீர்ப்பையும் எதிர்நோக்கி உள்ளார்.. இந்த தீர்ப்பில் தனக்கு ஒருவேளை பாதகமான தீர்ப்பு வந்தாலும், அப்பீலுக்கு சுப்ரீம் கோர்ட் போக போவதாக தெரிகிறது.. ஆக மொத்தம் இந்த விவகாரம் இழுத்துக் கொண்டே செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.

     வெல்லமண்டி

    வெல்லமண்டி

    இனிடையே, சென்னையில் உள்ள வீட்டில், நேற்று திடீரென ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.. ஓபிஎஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலில் அவரை சந்தித்து பேசினார்கள்... இவர்களுடன்தான் ஆலோசனை என்று முதலில் நினைக்கப்பட்டது.. பிறகு, மாஜி அமைச்சர் குப. கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், திருச்சி ரத்தினவேல் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

     500 +

    500 +

    அதை தொடர்ந்து நிர்வாகிகள் ஓபிஎஸ் வீட்டுக்கு திரண்டு ஒவ்வொருவராக வந்து கொண்டேயிருந்தனர்.. நேற்று மட்டும் சுமார் 500 பேர் வரை ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார்களாம்.. இத்தனை பேரை ஓபிஎஸ் சந்தித்து இல்லை.. இப்போதுதான் முதல்முறையாக அனைவருமே அவசரமாக கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்பட்டாலும், வேறு ஏதோ ஒரு கணக்கு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

     மர்மங்கள்

    மர்மங்கள்

    விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் இத்தனை ஆதரவாளர்களை ஓபிஎஸ் மொத்தமாக சந்தித்ததன் மர்மம் இன்னும் நீங்கவில்லை.. இதனிடையே, இந்த கூட்டம் முடிந்த பிறகு வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது சொல்லும்போது, 'விரைவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும்.. அது கூட்டப்படும்போது முறைப்படி தகவலை சொல்வோம் என்று மட்டும் சொல்லிவிட்டு போனார்.. அப்படியானால், போட்டி பொதுக்குழு இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது.

    "வைட்டமின் ப"

    ஏற்கனவே, ஓபிஎஸ் நடத்தப்போகும் பொதுக்குழு குறித்து சில தகவல்கள் கசிந்தன.. அதாவது, பொதுக்குழு நடத்துவதற்காக "வைட்டமின் ப"- வை ஓபிஎஸ் தரப்பு இறக்கவில்லையாம்.. செலவு செய்தால்தானே கூட்டத்தை கூட்ட முடியும் என்ற புலம்பல்களும் வெளிவந்த நிலையில், பொதுக்குழுவில் போதுமான நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்புக்கு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. கூட்டத்தை கூட்டி, தன் பக்கம் ஆதரவாளர்கள் குறைவாக இருந்துவிட்டால், அது சறுக்கலாகிவிடும் என்பதால், இப்போதைக்கு பொதுக்குழு தள்ளிப்போவதாக 2 நாட்களுக்கு முன்புகூட தகவல்கள் பரபரத்தன.

     தீர்ப்பு + பொதுக்குழு

    தீர்ப்பு + பொதுக்குழு

    அதேசமயம், ஓபிஎஸ் பக்கம் தீர்ப்பு சாதகமாக வந்தால், துணிந்து பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது, எடப்பாடி பக்கம் இருப்பவர்களும், ஓபிஎஸ் பக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதால், பொதுக்குழு இப்போதைக்கு நடத்தப்பட மாட்டாது என்றார்கள்.. அதற்கேற்றவாறு, வைத்திலிங்கம் சொல்லிவிட்டு போனதும், தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.. ஆனாலும், அந்த 500 பேர் எதற்காக ஒரே நாளில் சென்றிருப்பார்கள்? என்ன பேசியிருப்பார்கள்? அதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

    500 +

    500 +

    அதை தொடர்ந்து நிர்வாகிகள் ஓபிஎஸ் வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டேயிருந்தனர்.. நேற்று மட்டும் சுமார் 500 பேர் வரை ஓபிஎஸ்சை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை பேரை ஓபிஎஸ் சந்தித்தது இல்லை.. இப்போதுதான் முதல்முறையாக அனைவருமே அவசரமாக கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்பட்டாலும், வேறு ஏதோ ஒரு கணக்கு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    தீர்ப்பு + பொதுக்குழு

    தீர்ப்பு + பொதுக்குழு

    அதேசமயம், ஓபிஎஸ் பக்கம் தீர்ப்பு சாதகமாக வந்தால், துணிந்து போட்டி பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் சொல்லப்படுகிறது. காரணம், இப்போதே அவர் பக்கம் வர பலர் தயாராக இருக்கிறார்கள்.. தீர்ப்பு வரும்பட்சத்தில், அப்போது, எடப்பாடி பக்கம் இருப்பவர்களும், ஓபிஎஸ் பக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதால், பொதுக்குழு இப்போதைக்கு நடத்தப்பட மாட்டாது என்றார்கள்.. அதற்கேற்றவாறு, வைத்திலிங்கம் சொல்லிவிட்டு போனதும், தகவலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.. ஆனாலும், அந்த 500 பேர் எதற்காக ஒரே நாளில் சென்றிருப்பார்கள்? என்ன பேசியிருப்பார்கள்? அதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

    English summary
    500+ AIADMK Supporters in OPS house and Senior leader vaithilingam says about general committee 500 ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X