500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? ரூ.500 நோட்டு மார்ச் மாதம் முதல் அவ்வளவுதானா? மத்திய அரசு விளக்கம்
சென்னை: 2000 ரூபாய் நோட்டை போலவே கூடிய விரைவில் அதாவது வருகிற மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்போகிறது, அன்றைய தினம் முதல் ரூ.500 செல்லாது என சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி கொண்டிருக்கிறது.. இது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இதுகுறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.. அது என்ன?
சமீப நாட்களாகவே, 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என்றும், அந்த நோட்டுகள் செல்லாததாக ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி பலரிடையே பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.
ரூ.500 செல்லுமா, செல்லாதா
அரசுக்கு சொந்தமான பிஐபி, இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படவில்லை என்றும், அப்படி எந்த முடிவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இப்போது மக்கள் பயன்படுத்தி வரும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் முழுமையாக செல்லுபடியாகும். அவற்றை கடைகளில், வங்கிகளில், அன்றாட செலவுகளுக்கு வழக்கம் போல் பயன்படுத்தலாம். ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது. ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெளிவாக தெரிவித்துள்ளார்.
நம்பகமான தகவல் இல்லை
இதற்கு முன்பும் 500 ரூபாய் நோட்டுகள் குறித்து இதே மாதிரியான வதந்திகள் பலமுறை பரவியுள்ளன. கடந்த வருடம் கூட ஒரு யூடியூப் வீடியோ மூலம் இந்த நோட்டுகள் செல்லாததாக ஆகும் என்று கூறப்பட்டபோது, அரசு உடனடியாக தலையிட்டு அந்தச் செய்தி பொய்யானது என்பதை நிரூபித்தது. இத்தகைய செய்திகளின் நோக்கம் மக்களிடையே தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதே ஆகும்.
பணமதிப்பிழப்பு போன்ற முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் போது, அதை அதிகாரப்பூர்வமாகவும் முன்கூட்டியும் அறிவிக்கும். ரிசர்வ் வங்கியின் வெப்சைட் மற்றும் அரசு அறிவிப்புகள் மூலமாக மட்டுமே நாணயம் தொடர்பான தகவல்களை நம்ப வேண்டும்.
பொதுமக்கள் குழப்பம்
சோஷியல் மீடியாவில் வரும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பக்கூடாது என்றும், அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் பிஐபி கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, 500 ரூபாய் நோட்டுகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப தேவையில்லை. மக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி, வழக்கம் போல தங்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். விழிப்புணர்வுடன் இருப்பதே இத்தகைய பொய்ச் செய்திகளைத் தடுக்க ஒரே வழி என்று அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு போலியான தகவல் என்ற தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்களிடம் நிம்மதி எழுந்துள்ளது..!
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications