"வித்தகி" வித்யா.. பச்சை துரோகத்தில் சிக்கிய அப்பிராணி.. "அதை" சொன்னாலே பிடிக்காதாம்.. அந்த அஜித் வேற
50 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: கல்யாண பேச்சை எடுத்தாலே வித்யாவின் முகம் கடுகடுவென மாறிவிடுமாம்.. குறுக்கே அஜித் என்பவர் வேறு வந்திருக்கிறார்... கடைசியில் என்ன நடந்தது என்று பாருங்கள்..!!
சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி.. 42 வயதாகிறது.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டார்.. எனவே, மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நண்பருக்கு மதுரையில் திருமணம் நடந்துள்ளது..

டைவர்ஸ்
அந்த கல்யாணத்துக்காக ராம்பாலாஜி சென்றிருக்கிறார்.. அப்போது அந்த கல்யாணத்தில் வித்யாஸ்ரீ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர்தான் வித்யா.. இந்த பெண்ணுக்கு 31 வயதாகிறது.. இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், இந்த பெண்ணும், கணவரைவிட்டு பிரிந்து டைவர்ஸ் வாங்கிக்கொண்டு, தனியாக வசித்து வருகிறார். 2 பேருமே டைவர்ஸ் என்பதால், அறிமுகமான கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நட்பாக பேசியுள்ளனர்..

ஸ்ரீவித்யா
ஒருகட்டத்தில், ராம்பாலாஜியுடன் நெருங்கி பேசிய வித்யா, நாம் 2 பேரும் 2-வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று ராம்பாலாஜியுடன் சொல்லி உள்ளர்.. அதற்கு ராம்பாலாஜியும் சம்மதம் தெரிவித்தார்.. எப்போது திருமணம் செய்து கொள்வது என்று இருவருமே முடிவெடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர்கள் பழகி வந்துள்ளனர்.. ராம்பாலாஜியிடம் அவ்வப்போது தன்னுடைய தேவைக்காக வித்யா பணம் கேட்டுள்ளார்.. கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்தானே என்பதால், அவர் கேட்கும்போதெல்லாம் ராம்பாலாஜியும் பணம் தந்துள்ளார்..

டிசைன் டிசைன்
வித்யா செலவுக்கு பணம் கேட்கும்போதெல்லாம் மறுக்காமல், அவரது அக்கவுண்ட்டில் பணத்தை அனுப்பிவிடுவாராம் ராம்பாலாஜி.. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வித்யாவின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக தெரிகிறது.. இதனிடையே இவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்களாம்.. அப்படி நேரில் சந்திக்கும்போதெல்லா வித்யாவுக்கு நகைகளை தந்து அழகுபார்த்துள்ளார் ராம்பாலாஜி.. ஒருகட்டத்தில், கல்யாண பேச்சை எடுத்துள்ளார் ராம்பாலாஜி.. கல்யாணம் என்று சொன்னதுமே வித்யாவின் முகம் மாறிவிடுமாம்.. இப்போதைக்கு டைம் சரியில்ல.. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே என்று ஏதாவது சாக்கு சொல்லியே வந்திருக்கிறார்.

ஸ்விட்ச்ஆஃப்
ஆரம்பத்தில் இதை பெரிதாக ராம்பாலாஜி கண்டுகொள்ளவில்லை என்றாலும், கல்யாண பேச்சையே வித்யா தவிர்த்து வருவது, திடீரென சந்தேகத்தை உண்டுபண்ணியது.. அதுமட்டுமல்ல, கடந்த சில வாரங்களாகவே வித்யாவை காணோமாம்.. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப்பிலேயே உள்ளதாம்.. இதற்கு பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று ராம்பாலாஜி உணர்ந்துள்ளார்.. எனவே, பணம், நகைகளுடன் மாயமான வித்யாஸ்ரீ மீது மோசடி புகாரை மதுரை எஸ்பி அலுவலகத்தில் தந்தார்..

அபேஸ் வித்யா
இதையடுத்து போலீசார் வித்யாவுக்கு தேடுதல் வலையை வீசி, இறுதியாக அவரை பிடித்தனர்.. விசாரணையும் நடத்தினர்.. அப்போது பணம், நகை பெற்றுக்கொண்டது உறுதியானது.. இதையடுத்து, தன்னுடைய அப்பாவின் நிலத்தை விற்று, அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக உறுதிதந்தார் வித்யா. இதற்காக 5 மாதகாலம் டைம் கேட்டார்.. ஆனால் மறுபடியும் ஏமாற்றி உள்ளார்.. இந்த பணத்தை கடைசிவரை திருப்பி தரவே இல்லையாம்.. இதனால் அதிர்ந்துபோன ராம்பாலாஜி, வித்யா விஷயத்தில் தானே நேரடியாக இறங்கினார்..

லிவிங் டூ கெதர்
அப்போதுதான் இன்னொரு இடி ராம்பாலாஜி தலையில் வந்து விழுந்தது. வித்யாவுக்கு இன்னொரு காதலன் இருக்கிறாராம்.. அவர் பெயர் அஜித்.. 2 பேருமே ஒரு வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து உறைந்து போனார் ராம்பாலாஜி... இவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், இத்தனை மாதமாக தன்னை மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, கோர்ட்டுக்கு ஓடினார்.. அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை மோசடி செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், வாடிப்பட்டி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்...

ப்யூட்டிஃபுல்
இது தொடர்பான விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அலங்காநல்லூர் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வித்யாஸ்ரீ, அஜித் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் நேற்றுதான் கைது செய்தனர்.. மோசடி குறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. தானாகவே வலிய வந்து 2வது கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்ற ஆசைவார்த்தை கூறிய பெண்ணுக்கு சம்மதத்தை சொல்லி, ரூ.50 லட்சம் வரை பணத்தையும் தந்து, டிசைன் டிசைனாக நகைகளையும் வாங்கி போட்டு அழகு பார்த்த ராம்பாலாஜி, ஏமாந்துபோன அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்..!
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications